நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Thursday, 26 January 2012

கைவிளக்கேந்திய காரிகைகளுக்கு... ஆதரவுக்கரம் கிடைக்குமா???

தனியார் கல்லூரியில் படித்த செவிலியர்களுக்கும் அரசாங்கத்தில் வேலை... அரசு உத்தரவு... பல ஆயிரம் பேர்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்த இந்த அறிவிப்பிற்கு சிலரின் தூண்டுதலால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது...


அரசுக்கல்லூரியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கப்பணியில் வேலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று... எங்கோ கர்நாடகாவிலோ அல்லது ஆந்திராவிலோ காசு கொடுத்து தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி படித்துவிட்டு வருபவர்களுக்கு அரசில் வேலை உண்டு(தகுதித்தேர்வு இல்லாமல்)... தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு (தொலைதூரக்கல்வியானாலும்) அரசாங்க தேர்வினை எழுதி அரசு வேலையில் சேர அனுமதி உண்டு...
 இதே அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டு, மாநில மற்றும் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்த தனியார் கல்லூரி செவிலியர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்.... 


நேற்றைய செய்தித்தாளில் ஒரு அறிவிலி தன்னை அறிவாளி என்று நினைத்துக்கொண்டு ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.... அவர்தான் தமிழ்நாடு நர்சுகள் சங்க செயலாளர் அறிவுக்கண்!!!???

அவர் சொன்னது இதுதான்... 
அரசு கல்லூரிகளை சேர்ந்த நர்சிங் மாணவிகள் படிக்கும்போது, நோயாளிகளுக்கு ஊசி போடுவது, மருந்து மற்றும் மாத்திரை கொடுப்பது, அவர்களை அரவணைப்பது என நேரடியாக சேவை செய்கின்றனர்... அறுவை சிகிச்சையின்போது டாக்டர்களுக்கு உதவியாக உள்ளனர்... ஆனால் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் புத்தகத்தை மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கும் நோயாளிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை... (புல் மப்புல இருக்கிறவன் கூட இப்படி பேச மாட்டான்....) 

எனக்கு ஒரு சந்தேகம்.... அரசு கல்லூரி மாணவிகள் நேரடியாக சேவை செய்கிறார்கள் என்றால்... தனியாரில் படிப்பவர்கள் என்ன சேவையை பார்சலிலா செய்கிறார்கள்...??? புண்ணாக்கு...

தனியார் கல்லூரி மாணவிகளுக்கும் நோயாளிகளுக்கும் தொடர்பு இல்லை என்றால்... இன்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்திலும் வேலை செய்யும் செவிலியர்களில் 99 .99 % தனியாரில் படித்தவர்கள்தான்... அவர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்யாமல் வேறு யாருக்கு சேவை செய்கிறார்கள்...???

மத்திய அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு இருந்தால் அரசு கல்லூரியானாலும் சரி தனியார் கல்லூரியானாலும் சரி தகுத்திதேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கின்றனர்... உதாரணத்திற்கு ஜிப்மர் மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகள்.... இன்னும் சொல்லப்போனால் புதுடில்லியில் அந்த மாநிலத்திற்கு தேவையான செவிலியர்களை அவர்கள் இந்திய அளவில் தேர்வு வைத்துதான் தேர்ந்தெடுக்கிறார்கள்....தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இதில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

இதே அறிவுக்கண்ணை கேட்கிறேன்... இவரோ அல்லது இவரை சார்ந்தவர்களோ தனியார் மருத்துவமனைக்கே சென்றதில்லையா??? அங்கு தனியாரில் படித்த செவிலியர்களால் சிகிச்சை பெற்றுக்கொண்டதில்லையா??? என்னமோ பேசனும்ன்னு பேசக்கூடாது...

அரசாங்கத்தால் வழங்கப்படும் சான்றிதழில் அது டிப்ளமோவாக இருந்தாலும் சரி அல்லது டிகிரியாக இருந்தாலும் சரி.... அதில் அரசு செவிலியர் (Govt Nurse) என்றோ அல்லது தனியார் செவிலியர் (Private Nurse)என்றோ குறிப்பிடுவதில்லை... அவர்கள் கொடுப்பதெல்லாம் அரசு பதிவு பெற்ற செவிலியர் என்பதுமட்டுமே...

தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செய்முறை பயிற்சி பெறுகிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா??? அப்படியெனில் அவர்களுக்கு அவர்களுடைய தகுதியின்பேரில் அரசு வேலை தருவது ஒன்றும் தவறல்லவே... 

கடைசியில் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... 
உங்கள் தகுதியின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்... இந்த தகுதித்தேர்வை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள்... 
அரசு கல்லூரிகளில் படிப்பவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல...
தனியார் கல்லூரிகளில் படிக்கும் அனைவரும் முட்டாள்களும் அல்ல......
கடைசியாக நீங்கள் ஒன்றை செய்யலாம்... தனியார் கல்லூரிகள் அனைத்தையும் மூடிவிடுங்கள்... உங்களுடைய குறை தீர்ந்துவிடும்... 
அரசு பிறப்பித்துள்ள அந்த உத்தரவு...

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்