நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Monday, 29 August 2011

மரணத்தின் வாயில் மனிதத்தலைகள்....

                                                         தலை தப்புமா? ? ? ?

இப்ப நீங்க தமிழனுங்கன்றதுனால மட்டுமில்ல....சாவடிக்கப்பட்டானே...ராஜீவ் காந்தி...அதுல உங்கமேல பெரிய கதைய கட்டி உள்ள வச்சிருக்கானுங்கன்னு மட்டும் நல்லா தெரியுது....அதனாலதான் உண்மையான ஒவ்வொரு தமிழனும் உங்களுக்காக குரல் குடுக்குறான்...
காங்கிரஸ் மாதிரி ஒரு கேடுகெட்ட கட்சி நம்ம இந்தியாவுலையே கிடையாது....இவனுங்க இன்னும் ஆட்சில இருந்தா நாளைக்கு இந்தியாவே இல்லங்குற நிலைமை வந்துடும்....அதுக்காக மதவெறியனுங்க கிட்ட இந்தியாவ கொடுக்கவும் முடியாது,...ரெண்டும் ஒண்ணுதான்....

=======================================================================
ஐயா தலைவருங்களே...உங்க பேருக்கு முன்னாடி எத்தனையோ அடைமொழி போட்டுக்குறீங்க....பரவாயில்ல போட்டுக்கோங்க...ஆனா இந்த ஒரு விசயத்துல நீங்க எல்லாரும் ஒண்ணா இருந்தா நிச்சயமா ஏதாவது பண்ண முடியும்...
தமிழ்நாட்டுல ஓராயிரம் தமிழினத்தலைவருங்க இருக்கீங்க....எல்லாத்தையும் செய்யக்கூடிய தலைவிகூட இருக்காங்க....உங்களோட பலத்தை இதுல காட்டுங்களேன்....உங்களுக்கு காலம் காலமா தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கும்....
ஒரு முத்துக்குமார், ஒரு செங்கொடி...போனதுக்கு அஞ்சலி செலுத்திட்டு அடுத்த வேலைய பாக்க போயிடுறீங்க...
அதுசரி...செங்கொடி போனா என்ன....??? தமிழனுங்க ரத்தம் செங்கடலா போனாலே....நீங்க கவலைப்படுறதில்ல......
எது எப்படியாவது போகட்டும்.....கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் நிறைந்துள்ள உங்களைப்போல அரசியல்வாதிகளும்....சினிமா பிரபலங்களும்...ஒன்னு சேர்ந்து ஏதாவது பன்னுங்கைய்யா ......!!!!!

======================================================================

முதல்வர் அம்மாகிட்ட எல்லா அரசியல் கட்சி தலைவருங்களும் கோரிக்கை வச்சாங்க....ஆனா என்னால எதுவும் செய்ய முடியாது....அதுக்கான அதிகாரம் என்கிட்டே இல்லேன்னு அம்மா சொல்லிட்டாங்க....அம்மா உங்களால எத்தனை பர்சென்ட் முடியுமோ அதை செய்யுங்கன்னு கேட்டுக்கிறோம்....முதல்வரால முடியும்ன்னு தமிழ் அமைப்புகளும்...அரசியல் கட்சி தலைவர்களும் நம்புறாங்க....அது உண்மையா பொய்யான்னு தெரியல....கடவுளுக்குத்தான்  வெளிச்சம்....
ஏதோ உங்களால முடிஞ்சது....இந்த லிங்க்குல ஒரு பெட்டிஷன் போடுங்க ப்ளீஸ்........
  http://www.petitiononline.com/Muthu78/petition-sign.html
====================================================================
இந்த மூணு சகோதரர்களும்....நமக்கு என்ன ஒட்டா இல்ல உறவா அப்படின்னு இருக்கமுடியல....நீங்க தமிழனுங்க....அதனால....நிச்சயமா உங்க குரல் அம்பலம் ஏறாது....
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக....தகவல். காக்கிச்சட்டை அதிகாரிகளே... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்கு தெரியாது....ஆனா ஒரு வேண்டுகோள் மட்டும் வெக்கிறோம்...தயவு செய்து...இந்த மூணு பேருக்கும் தூக்கு கிடைக்குதோ இல்லையோ,....இப்ப அவங்க மரணத்தோட வாயில் தங்களுடைய தலையை குடுத்திருக்கிறாங்க....ஏற்கெனவே அவங்களோட மனசு....சிதைஞ்சுபோயிருக்கு....இதயம் நொறுங்கிபோயிருக்கு....அவங்கள கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடுங்கையா...பிளீஸ்...

=====================================================================

இதுக்கு நடுவுல இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி....ஒரு மருத்துவக்கல்லூரி மாணவன் உயிரிழப்பு....கொலையா? தற்கொலையா?...தெரியவில்லை....
இன்னுமொரு நாவரசு.....ஜாண்டேவிட்டா??? தெரியவில்லை....ஆனால் காரணம் ராக்கிங்தான் என்பது தெளிவாக தெரிகிறது....
உண்மை வெளிவரும்....அப்போது தெரியும்....தனியார் கல்லூரிகள்....மாணவர் சேர்க்கையிலும்...பணம் வசூலிப்பதிலும்...காட்டும் ஆர்வத்தை...
ராக்கிங் தடுப்பதில், மாணவர்களின் நலனில் காட்டுவதில்லை. உங்கள் கல்லூரிக்கு இன்னும் ஆயிரம் மாணவர்கள் கிடைப்பார்கள்....நாட்டிற்கு
மருத்துவர்கள் கிடைப்பார்கள்..... ஆனால் அந்த குடும்பத்திற்கு....உங்களால் இழந்த மகனை கொடுக்கமுடியுமா....? எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டு வருவானா அந்த மாணவன்....நீங்களெல்லாம் என்னத்த படிப்பு சொல்லிக்குடுத்து...அத உங்க காலேஜ் பசங்க படிச்சி....நாட்டையும்...நாட்டு மக்களையும் காப்பாத்த போறாங்களோ....?????

Saturday, 27 August 2011

பார்வையின் மத்தியில் ஓர் பயணம்....

                                              படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
என்னுடைய சொந்த ஊரான திருவள்ளூரிலேயே, ஒரு பிரபல தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு என் தந்தையை செக்கப்புக்கு கூட்டிட்டு போனேன்... ஒரு சில டெஸ்ட் எடுக்க அங்கிருந்து அவங்களோட சென்னை மருத்துவமனைக்கு போகணும்ன்னு சொன்னாங்க..... அவங்களே அதற்கான போக்குவரத்தையும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க... காலை எழேகாலுக்கு வரச்சொன்னார்கள். நாங்களும் அதுக்கு ஐந்து நிமிஷம் முன்னாலேயே  போய்விட்டோம்...
அங்கு அவங்க அட்டன்டன்ஸ் எடுத்துட்டு எட்டேகால் வரைக்கும் வெயிட் பண்ண வச்சாங்க....பாவம் வந்தவங்கள்ள பாதிக்கு மேல சுகர் பேஷண்டுங்க(எங்கப்பாவையும் சேத்து)... எல்லாரும் அங்க இங்கன்னு போயி டிபன் வாங்கினுவந்து சாப்பிட குடுத்தோம்...
ஒரு ஆறு ஜோடி வயசானவங்க... ஜோடியில ஒருத்தர் கண்ணுல பிராப்ளம்...அவங்கவங்க ஜோடிய கையபுடிச்சி கூட்டுன்னு வந்த அழகு இருக்கே...இதெல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டங்க....
ஒருவழியா வண்டியில ஏறி 8.20 க்கு கெளம்பி 10.30 க்கு பொய் சேர்ந்தோம்...

எத்தனையோ முறை அந்த வழியில போயிருந்தாலும் இதுதான் அந்த ஆஸ்பத்திரிக்குள்ள மொதல் முறையா போனது... வித்தியாசமான மனுஷங்க...
                                              

எங்க பக்கத்துல ஒரு மாமி தன்னோட பையனுக்கு கண்ணு சரியா தெரியலன்னு வந்தாங்க போல இருக்கு, பையனுக்கு வயசு ஒரு 38 க்குள்ள இருக்கும். கொஞ்சம் மனவளர்ச்சி இல்லாம இருந்தான்....பெரிய சோடா புட்டி கண்ணாடி போட்டுனு இருந்தான்....அவனுக்கு கண்ணுல பார்வை வரணும்னா 80000 ரூபாய்க்கு ஏதோ ஒரு இன்ஜெக்சன் போடணும்னு சொல்லிட்டு, 20 % தான் பார்வை வரும்...ஆனாலும் கியாரண்டி இல்லேன்னு சொல்லிட்டாங்கபோல....பாத்தா பணக்காரங்களாத்தான் தெரிஞ்சாங்க...உடனே பணத்துக்கு ரெடிபண்ணிட்டு இருந்தாங்க....அந்த மாமி சவுண்டா போன்ல பேசுனதுல இருந்து இதெல்லாம் தெரிஞ்சிச்சி...
இன்னொரு பக்கம்...வயசான அம்மாவும் அவங்களோட வயசான பொண்ணும்.....காசுக்கு எங்கம்மா போறது.....கண்ணுல புரை இருக்கு ஆபரேஷன்  பண்ண 25000 ரூபாய் செலவாகும்ன்னு சொல்றாங்களேன்னு...புலம்பிக்கிட்டு இருந்தாங்க...நாங்க நடுவுல ஒக்காந்துனு இருந்தோம்....அப்பத்தான் புரிஞ்சது....மிடில் கிலாசுன்னா என்னான்னு...
 சும்மா ஆஸ்பத்திரிய ஒரு ரவுண்டு வந்தேன்... அங்கு வேலை செய்றவங்கள்ள 90 % பெண்கள் மூக்குத்தி போட்டுனு இருக்காங்க...அது ஒரு குவாலிபிகேஷன் போலிருக்கு....

                                                    படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
கண்ணு, கம்ப்யூட்டர், கண்ணாடி....இதைத்தவிர வேற ஒண்ணுமே கண்ணுக்கு படல....

மதியம் சாப்பிட ஒரு கேண்டீன் இருக்கு....அங்க போய் என்னமோ சாப்டுட்டு சும்மா மொட்ட மாடியில போய் நின்னு சென்னை எப்படி இருக்குன்னு பாத்தேன்...
                                              படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
அட!  நம்ம சென்னையா இதுன்னு விவேக்குக்கு வர்றாமாதிரி மைல்டா ஒரு டவுட்டு எனக்கும் வந்தது....
                                             படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
இன்னும் நிறையா மரம் இருந்தா நல்லாத்தான் இருக்கும்.....
பரவாயில்லன்னு சந்தோசப்பட்டுக்கிட்டே கீழ வந்தா....
                                                                    படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
ஏய்...இன்னா மாமே....நம்ம மெட்ராசு மேலியே டவுட்டு வச்சிக்கிரியான்னு....கேக்குறாமாதிரி இருந்திச்சி அங்க பாத்த காட்சி....
        படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
 
தமிழ் நாட்டோட முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வருங்க....இந்த ஏரியாவுலதான் இருக்காங்க...நாத்தம் தாங்க முடியலடா சாமி.....
கண் ஆஸ்பத்திரிக்கு வந்தவங்க.... கண்ண மூடிக்கினு போனாங்களோ இல்லையோ.....நல்லா மூக்க மூடிக்கினு போனாங்க....
 

Friday, 26 August 2011

கண்ணுபோகப்போகுதையா சின்னகவுண்டரே.....



ஏம்பா கண்ணு தெரியல....இப்படி வந்து இடிக்கிற ...மெறிக்கிற....நடக்கற....ஓடுற....ஒக்கார்ற....இன்னும் என்னென்னமோ திட்டுவாங்க....கொஞ்சம் லேசா தெரியாம பட்டதுக்கே...ஏச்சும், பேச்சும் இடிவாங்குற ஆளை பொறுத்து...இன்னும் அசிங்கமாவும் வரும்...இல்லேன்னா...நாம இடிச்சதுக்கு சாரி கேட்டுட்டுப்போற ரொம்ப நல்லவங்களும் உண்டு...
இதுக்கெல்லாம் காரணம் நம்மளோட கண்ணுதான்....

















அத ஒழுங்கா பாத்துக்கலேன்னா இந்த பதிவைக்கூட பிரைய்லியிலதான் படிக்கவேண்டி இருக்கும்...

நல்லது, கெட்டது....சந்தோசம், துக்கம்....சாந்தம், கோபம்....காதல், காமம்....ஏன்.....பணக்காரனா, எழையான்னு கூட கண்ண பாத்தே தெரிஞ்சிக்கலாம்....எல்லாத்துக்கும் கண்ணுதான் மூல காரணம்...இந்த கண்ணுக்கு என்னென்ன செய்யலாம்.....












ரெட், கிரீன், ஆரஞ்சு கூட பிரண்ட்ஷிப் வச்சுக்கனும்னா......
செவ்விந்தியர்கள் கூடவும்,
பாகிஸ்தான்காரங்க கூடவும்,
சாமியாருங்க கூடவும்........இல்ல....

 ரெட்டுன்னா... "தல" இல்லீங்கோ...தக்காளி...


ஆரஞ்சுன்னா....

இதுவும்.... இதை சார்ந்ததும்..

 க்ரீனுன்னா....இதெல்லாம் மேயனும்...

இது கண் புரை வருவதை தடுக்கும்.....இல்லேன்னா தள்ளிபோடும்....

இதுமட்டுமில்லீங்க... இன்னும் நிறைய இருக்கு....
ஒன்னொன்னும் ஒவ்வொரு விதத்துல நல்லது....

 நெத்திலியும்.... ஓலவால மீனுமில்ல....நல்ல சதை இருக்குறாமாதிரி (அதுக்காக ஷகிலா மீனு இருக்கான்னு கேக்கக்கூடாது...ஆமா
...) பெரிய மீனா வாங்கி, பொரிக்காம... குழம்புல போட்டு சாப்பிடனும்...


அப்புறம்....
தானிய வகைகள்....பருப்பு வகைகள்....இதெல்லாம்

இவ்வளவையும் சொல்லிட்டு....இத சொல்லலன்னா எப்படி....???
அதாங்க...நம்மையெல்லாம் கண்ண கசக்க வெக்கிறது....
நம்ம ஐயா பெரியார் சொல்லுவரே....ம்ம்ம்...அதே...அதேதான்....
வெங்காயம்....
இம்புட்டையும் சாப்புட்டா....தைரியமா...
கண்ணே கலைமானே....
கண்ணுக்குள் நூறு நிலவா...ன்னு பாடி
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்கலாம்....
இல்லேன்னா....ரெண்டு கண்ணும் நொள்ளைதான் அடிக்கும்....




Tuesday, 23 August 2011

இந்த வார மொக்கை....

ஜோக்கு...
சென்ட்ரல் கவர்மெண்ட்டு ஏற்கெனெவே நாலன்னாவை தூக்கிருச்சி...இப்ப எட்டன்னாவையும் தூக்கப்போறாங்கலாம்...ஏன் தெரியுமா ????
அவங்களால ஒரு "அன்னா" வையே சமாளிக்க முடியலாம்.... இதுல எங்க எட்டு "அன்னா" வை சமாளிக்கிறது....
=========================
சோக்கு....
என்னவள் சொன்னாள்
உயிரையும் கொடுப்பேனென்று...
ஆம்...
கொடுத்தாள்
என் உயிரை..
யாருக்காகவோ....

========================
ஹைக்கூ

என் இதயத்தில்
லேசாக ஓர்
லேசர் அறுவைசிகிச்சை...
அவளது பார்வை...

========================
பனித்துளி போல் - என்
கண்ணீர்த்துளிகள் ....
அன்பே
சூரியனாய்
நீ இருப்பதாலோ....
========================
பசுமரத்து ஆணிபோல்
என் மனதில்
உன் நினைவுகள்...
இப்போதுதான் புரிகிறது....
ஆணி புடுங்குறது
எவ்வளவு கஷ்டம் என்று....
=================

பேக்கு......

கைத்தொழில் ஒன்றை
கற்றுக்கொள்..
கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள் ....
புரிந்துகொண்டேன்....
திருமணத்திற்கு பின்
ஓர் ஆடி மாதத்தில்...

-மொக்கைசாமி


Saturday, 20 August 2011

தாயில்லாமல் நானில்லை...

தாய்....அன்னை...அம்மா....மாதா...
இப்படி என் தாயை அழைத்ததில்லை....
ம்மா.....மோவ்....யம்மா....ஏம்மா...
இப்படித்தான் அழைத்திருக்கிறேன்....
இனி எப்படி அழைத்தாலும்
பிழைத்து வரப்போவதில்லை
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணிமைக்க மறந்து
மண்ணிமையால் மூடப்பெற்ற
என்னருமை அன்னை...

பிறக்கும் போதே உன்னை கஷ்டப்படுத்தியவன் நான்....
ஏனென்றால் நான் பிரசவிக்கப்படவில்லை....
பிரித்தெடுக்கப்பட்டேன்.....

என் அம்மாவாய்
ஆசிரியையாய்
அரும் செல்வமாய்
அன்பின் இலக்கணமாய் ...ஏன்
என் ஆண்டவனுமாய்
இருந்திட்டாய் நீ...

உன்னை என் தெய்வம் என்று
எப்படி சொல்வது...???
நாத்திகராலும்
வணங்கப்பட்டவளாயிற்றே நீ...

கற்க கசடற என
கற்பித்தவள் நீ....- நாங்கள்
அதற்குத்தக நிற்கும்போது
நில்லாமல் போனது ஏனம்மா???













நான் வியாதிப்படுக்கையில் 
வலுவிழந்தபோதெல்லாம்
உன் ஆயுசு நாளை
எனக்கு தரச்சொல்லி
கண்ணீருடன் வேண்டிக்கொள்வாயே...
இப்போது என்னை நான் தேற்றிக்கொள்கிறேன்
இனி எனக்கு வியாதிப்படுக்கை இல்லையென்று....

நாங்கள் உலகத்திடம் கற்றுக்கொண்டதைவிட
உன்னிடம் கற்றுக்கொண்டது அதிகம்....
அறுசுவை மட்டுமல்ல...ஏழாவதாக
நகைச்சுவையும் ஊட்டினாய் நீ...

ஒவ்வொரு மனிதனிடமும்
ஒவ்வொன்றை கற்றுக்கொள்ளலாம்-ஆனால்
உன்னிடம் மட்டுமே
மனிதத்தை கற்றுக்கொண்டோம்...
உன்னால் செதுக்கப்பட்டோம்....
 
















கல்லறையை கருவறையாய்
மாற்றிக்கொண்டாயே...
நம்பிக்கை இருக்கிறது
நீ மீண்டும் பிறப்பாய்...நாம்
இன்னும் வாழ்வோம் சிறப்பாய்....

நிறைய சொல்வேன்...

Thursday, 18 August 2011

வசூல் ராஜாக்கள்...

ஆஸ்பத்திரியில வேலை செய்றதுனால நான் எல்லாத்தையும் நேர்ல கண்கூடாக தினமும் பாக்குறவன்....சிலருக்கு சொன்னாலும் கேக்குறதில்ல...நம்ம ஜனங்களுக்கு என்னான்னா டாக்டர் சொல்றத செஞ்சிடனும்....எவ்வளோ செலவானாலும் பரவாயில்ல...தேவையில்லாமலேயே ஆணி புடுங்குற டாக்டருங்க நிறைய பேரு இருக்காங்க...இப்படித்தான் ஒரு டாக்டர்கிட்ட எங்க அக்கா ஜலதோஷம், தலைவலின்னு போச்சி....அந்த ஆளு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ஒரு சி.டி. ஸ்கேன் மூளையை எடுக்க சொல்லிட்டான்...அதுவும் அந்த டாக்டர் சொல்ற இடத்துலதான் எடுக்கணுமாம்.... அந்த சீட்ட எடுத்துக்கிட்டு என்கிட்டே வந்தாங்க....நான் அவங்கள பாத்ததுமே சொல்லிட்டேன்....அவங்களுக்கு சைனஸ் பிராப்ளம் மாதிரி இருக்கு...இதுக்கு மூளையை சி.டி.ஸ்கேன் எடுக்க வேணாம்... வேணுமின்னா...ஒரு சி.டி.ஸ்கேன்...PNS (அதாவது முகத்துல எடுக்குறது...) எடுத்துரலாம்ன்னு எனக்கு தெரிஞ்ச ஆஸ்பத்திரிக்கு கூட்டினுபோயி எடுத்தோம்....அதுல சைனஸ் பிராப்ளம் இருக்குன்னு ரிபோர்ட் வந்துருச்சி...சரின்னு டாக்டர் சொன்னாரே...மறுபடியும் கேப்பாரேன்னு சி.டி.ஸ்கேன் மூளையும் எடுத்தோம்...(எடுத்தது என்னோட பிரண்டுன்னுறதுனால ரெண்டுமே ப்ரீயா எடுத்தோம்) அது நார்மல்ல்னு வந்துருச்சி....இப்போ சொல்லுங்க....இதே ஸ்கேன் வெளிய எடுத்தா... 4500 லிருந்து 6000 வரை செலவாகிறது...இதில் டாக்டருக்கு  ரெண்டிலிருந்து மூனாயிரம் வரை கமிஷன் போயிரும்....எனக்கு தெரிஞ்சதால....எங்க அக்காவோட பர்ஸ் தப்பிச்சது....அடுத்தவங்களோட நிலைமை?????

Wednesday, 17 August 2011

சிவப்பு மை

ஒண்ணுமே புரியல உலகத்துல....எங்கேயோ பாடுற சத்தம் கேக்குது.....

நேத்துதான் சுதந்திர தினத்தை துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு, கலவரமெல்லாம் இல்லாம கோலாகலமா கொண்டாடிட்டு...இன்னிக்கி பொழுது விடிஞ்சும் விடியாததுமா, பாவம் பெரியவர் அன்னா ஹசாரே-வை கைது செஞ்சு தூக்கிட்டு போய் திஹார் ஜெயில்ல வச்சிருக்காங்க....என்னையா அநியாயம் இது....கோடி கோடியா கொள்ளையடிச்சவனுக்கும் அதே திஹார் ஜெயில்தான்... கொள்ளை அடிக்கிறத தடுக்கனும்ன்னு சொல்றவனுக்கும் அதே ஜெயில்தான்....
விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன்-ன்னு எவனோ சொன்னானாம்...அந்த மாதிரியில்ல இருக்கு இது......
இதுதானா நேத்து கொண்டாடின சுதந்திரம்...????
ஊழலை தடுக்கனும்னா ஜெயில்ல போட்டுடறான்....
இந்த திருட்டுப்பய அரசியல்வாதிங்க திருந்தவே மாட்டானுங்களா....??
இவனுங்களை எல்லாம்  கொல்லுறதுக்கு பார்லிமெண்டுல குண்டு வச்சவங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசு கூட குடுக்கலாம்....
பேமானிங்க ஊர் பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சி வாயில போட்டுக்கிட்டு, அத கேட்டா கைது பண்ணுவாங்களாம் கைது...
ஒரு கான்பாரன்ஸ் ஹாலுக்கு முன்னாடி இப்படி எழுதி  வச்சிருந்திச்சாம்...."உள்ள வரதுக்கு முன்னாடி உங்க செல் போனை எல்லாம் பிரைம் மினிஸ்டர் மோடு-ல மாத்திருங்கன்னு......" இந்தமாதிரி ஒரு சுறுசுறுப்பான பிரதமரை உலகத்துல எங்கேயும் பாக்கவே முடியாது....
மைக்க புடிச்சிட்டா நல்லா வக்கனையா பேசுறாங்க....
"ஊழலை ஒழிப்போம்" ங்குரானுங்க...
"வறுமையை அழிப்போம்" ங்குரானுங்க....
"விலைவாசியை குறைப்போம்" ங்குரானுங்க..
என்னா கலர் கலரா ரீல் விடுறானுங்க.......

சரி விடுங்க.... நமக்கென்ன.....
புதுசா தமிழ் தொலைகாட்சி வரலாற்றிலயே முதல்முறையாக-ன்னு போட்டி போட்டு படம் போடுறாங்க.... அத பாக்கலாம்....
எப்படி வித விதமா சமைக்கிறதுன்னு ஏகப்பட்ட ஆண்டிங்களும் மாமிகளும்...சொல்லிகுடுக்குறாங்க....அத செஞ்சு சாப்பிடலாம்....
நம்ம நீதியரசருங்க, ஐயா சாலமன் பாப்பையா....அங்கிள் லியோனி....அண்ணன் கு.ஞானசம்பந்தன் இவங்க தலைமையில பட்டிமன்றம் நடக்குது....அத பாத்து (சிந்திக்க எவ்வளோ இருந்தாலும்) சிரிச்சி சந்தோசமா இருக்கலாம்....
அரைகுறை நடிகைங்க பேட்டியும்....சுதந்திர போராட்டத்துல கஷ்டப்பட்ட நடிகருங்க வாழ்க்கையும் கேட்டு ரசிக்கலாம்.....
எப்பவாவது போரடிச்சா நியூஸ் பாக்கலாம்......
அட....எதுவுமே இல்லேன்னா போத்திக்கினு தூங்கலாம்.....
இதையெல்லாம் வுட்டுப்புட்டு.....என்னமோ....நாடாம்.....போராட்டமாம்....ஊழலாம்.....
போய் வேற வேலையிருந்தா பாருங்கையா......வந்துட்டான் சொல்றதுக்கு....
இந்த வேலையில்லாத மொக்கசாமி.....
.
எதனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே......மறுபடியும் எங்கேயோ பாடுற சத்தம் கேக்குது.....

Monday, 15 August 2011

சுதந்திர தின கொண்டாட்டம்...

காலையில எழுந்து ரெடியாகி கலெக்டர் ஆபீசுக்கு போகணும்....ஒரு பத்து பதினைஞ்சி வருசத்துக்கு முன்னாடி காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீசில் சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்த்தது நினைவிருக்கிறது... இப்போதுதான் முதல் முதலாய் திருவள்ளூரில் பார்க்கப்போகிறேன். (அப்படியாவது அந்த கலெக்டரை பாக்கலாமென்றுதான்). அதற்கு முக்கிய காரணம் என்னோட தங்கச்சி பொண்ணு அவளோட ஸ்கூல் மூலமா ஒரு டான்ஸ் ஆடுறா....கண்டிப்பா முன்னாடியே கூட்டிட்டு போயி ஒரு ரெண்டு மணிநேரமாவது வெயில்ல நிக்கவோ இல்லேன்னா உக்காரவோ வச்சிருப்பாங்க...ஏன்னா....நம்ம கலெக்டரு AC கார்ல வருவாருல்ல....அதுக்குத்தான்...

கேமரா எடுத்துனுபோயி நாலஞ்சி படம் நல்லா எடுக்கணும்.. பாதுகாப்பு அது இதுன்னு சொல்லி கிட்ட விடுவாங்களா தெரியல...பாக்கலாம்...
என்னிக்கித்தான் நிஜமான சுதந்திரத்த நிஜமாவே கொண்டாடப்போறோமோ......

சுதந்திரம்....

65 ஆவது சுதந்திர தினம்....ஆனால் இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம். அன்று சுதந்திரத்திற்காய் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் தியாகிகளாகிப்போனார்கள். இன்று அந்த சுதந்திரத்தை கூறுபோட்டு கொல்(ள்)பவர்கள் தியாகிகளென்று அவர்களாகவே சொல்லிக்கொள்கிறார்கள். தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்து இந்த கருத்துக்களை சொல்ல உதவிய சுதந்திரத்தை எப்படி காப்பாற்றிக்கொள்ளப்போகிறோம்??????
ஒருவன் நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் கஷ்டப்படவேண்டும்.... அந்த நல்லபெயரை காப்பாற்ற மிக மிக கஷ்டப்படவேண்டும்.
அதுபோல்தான் சுதந்திரமும்..
சுதந்திரம் கிடைக்கவே மிக மிக கஷ்டப்பட்டோம்.... அதை காத்துக்கொள்ள இனியாவது முயற்சி செய்வோம்
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்