இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இப்படி என் தாயை அழைத்ததில்லை....
ம்மா.....மோவ்....யம்மா....ஏம்மா...
இப்படித்தான் அழைத்திருக்கிறேன்....
இனி எப்படி அழைத்தாலும்
பிழைத்து வரப்போவதில்லை
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணிமைக்க மறந்து
மண்ணிமையால் மூடப்பெற்ற
என்னருமை அன்னை...
பிறக்கும் போதே உன்னை கஷ்டப்படுத்தியவன் நான்....
ஏனென்றால் நான் பிரசவிக்கப்படவில்லை....
பிரித்தெடுக்கப்பட்டேன்.....
என் அம்மாவாய்
ஆசிரியையாய்
அரும் செல்வமாய்
அன்பின் இலக்கணமாய் ...ஏன்
என் ஆண்டவனுமாய்
இருந்திட்டாய் நீ...
உன்னை என் தெய்வம் என்று
எப்படி சொல்வது...???
நாத்திகராலும்
வணங்கப்பட்டவளாயிற்றே நீ...
கற்க கசடற என
கற்பித்தவள் நீ....- நாங்கள்
அதற்குத்தக நிற்கும்போது
நில்லாமல் போனது ஏனம்மா???
நான் வியாதிப்படுக்கையில்
வலுவிழந்தபோதெல்லாம்
உன் ஆயுசு நாளை
எனக்கு தரச்சொல்லி
கண்ணீருடன் வேண்டிக்கொள்வாயே...
இப்போது என்னை நான் தேற்றிக்கொள்கிறேன்
இனி எனக்கு வியாதிப்படுக்கை இல்லையென்று....
நாங்கள் உலகத்திடம் கற்றுக்கொண்டதைவிட
உன்னிடம் கற்றுக்கொண்டது அதிகம்....
அறுசுவை மட்டுமல்ல...ஏழாவதாக
நகைச்சுவையும் ஊட்டினாய் நீ...
ஒவ்வொரு மனிதனிடமும்
ஒவ்வொன்றை கற்றுக்கொள்ளலாம்-ஆனால்
உன்னிடம் மட்டுமே
மனிதத்தை கற்றுக்கொண்டோம்...
உன்னால் செதுக்கப்பட்டோம்....
கல்லறையை கருவறையாய்
மாற்றிக்கொண்டாயே...
நம்பிக்கை இருக்கிறது
நீ மீண்டும் பிறப்பாய்...நாம்
இன்னும் வாழ்வோம் சிறப்பாய்....
நிறைய சொல்வேன்...
1 comment:
உங்களுடைய மனவருத்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது...
மனம் கனத்துவிட்டது ஒரு நிமிடம்....
பணித்து விட்டன கண்கள் ...
உன் நிலையில் என்னை இட்டேன்....
என்னால் தாங்கொண்ண முடியவில்லை
Post a Comment