இன்னிக்கு தேதியில வீட்ல சட்னியில கல்லு இருக்குதோ இல்லையோ....வீட்ல ஒருத்தருக்கு கிட்னியில கல்லு இருக்குது....இதுக்கு முக்கிய காரணம், முக்காத காரணம் எல்லாம் நாம தண்ணிய சரியா குடிக்காததுதான்....ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து லிட்டர் வரைக்கும் தண்ணி குடிக்கணும்ன்னு டாக்டருங்க சொல்றாங்க...
இது மட்டும்தான் காரணமான்னு கேட்டா....இல்லேன்னுதான் சொல்லணும்...
ஏன்னா...ஒருத்தருக்கு ச்சூச்சு வந்தா உடனே போயிரனும்...
அப்படி இல்லாம வேலை இருக்கு அப்புறமா போகலாம்ன்னு அடக்கி வச்சாலோ....இல்ல..எங்கேயாவது பஸ்லயோ, டிரைன்லையோ ரொம்ப தூரம் போகும்போது இத போகமுடியாம அடக்கி வைக்கிறதோ கூடாது....
நம்ம ச்சூச்சூவுல இருக்குறதெல்லாம் உப்புங்கதான்...அதுவும் நம்ம உடம்புல இருந்து வெளியேபோற தேவையில்லாத கழிவுங்க...ரொம்ப நேரம் அடக்கி வச்சா அதுல இருக்கிற உப்புங்கெல்லாம் வீழ்படிவு ஆகி...ஒன்னோட ஒன்னு கூடி கும்மி அடிக்கும்போதுதான் அது கல்லா மாறுது....அதுமட்டுமில்லாம குடிக்கவேண்டிய அளவு தண்ணிய குடிக்கலன்னா யூரின் ரொம்ப ஸ்ட்ராங்கா மஞ்சள் கலர்ல போகும்....அப்படி இருந்தாலும் உள்ளுக்குள்ள கும்மி அடிக்க ஆரம்பிச்சிடும்...
இந்த கிட்னியில இருக்குற கல்ல சாதாரணமா கிட்னி ஸ்டோன்ன்னு சொன்னாலும்...அதனோட பேரு "ரீனல் கால்குலை"ங்குறதுதான் சரி...ஒரு கல்லு இருந்தா "கால்குலஸ்"... அதிகமா இருந்தா "கால்குலை"...இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சைசுல இருக்கும்... இதை நெப்ரோலித்தியாசிஸ் என்றும் சொல்லுவார்கள்...(தவறை சுட்டிக்காட்டி இதையும் ஞாபகப்படுத்திய எங்கள் குரு..பாலா சார் அவர்களுக்கு நன்றி.....அவரது கமெண்ட்டை பார்க்கவும் )
சரி கல்லு இருக்குறத எப்படி தெரிஞ்சிக்கிறது....???
கல்லு இருந்தா ஒரு வலி வரும் பாருங்க....சும்மா சொல்லக்கூடாதுங்க....ஆளை உருட்டி எடுத்துரும்...
நடு முதுகுக்கு கொஞ்சம் கீழ, வலது பக்கமாகவோ...இல்லேன்னா இடது பக்கமாவோ ஆரம்பிச்சி(கல்லு இருக்குற பக்கம்)...அப்படியே முன்னாடி அடி வயிறு வரைக்கும் வலி பரவும்...நிமிந்து ஒக்காரவே முடியாது...
இந்த கிட்னி கல்லு, கிட்னியிலிருந்து சிறுநீர் குழாய் வழியா பிரயாணம் பண்ணி சிறுநீர் பைக்கு வரும்போது ரொம்ப வலிக்கும்....ரொம்ப மோசமான வலின்னு சொன்னா....அந்த ஸ்டோன் சிறுநீர் குழாயும் சிறுநீர்ப்பையும் சேருற இடத்துல மாட்டிக்குச்சுன்னா வருமுங்க....
இதனோட சைஸு 2 mm ல இருந்து ஆரம்பிச்சி சென்டிமீட்டர் அளவுக்கு கூட இருக்கும்...சிலபேரு வீடு கட்டுற அளவுக்கு கல்ல வெச்சிருப்பாங்க...
ஸ்கேன் எடுத்துப்பாத்தா.... எத்தனை இருக்கு...எங்கெங்க இருக்கு...எவ்வளோ பெரிசா இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்... 5 அல்லது 6 மில்லி மீட்டர் சைசுல ஒரு கல்லு இருந்தா அது தானா வெளியே வந்துடும்....அதாவது நிறைய தண்ணி குடிச்சா வந்துடும்... அதைவிட பெரிய சைசுல இருந்தா அதுவா வராது...நாமதான் வரவெக்கணும்...அதுவும் ஒடச்சிதான் எடுக்கணும்....சில நேரம் ஒன்னுக்கோட இந்த கல்லு வெளியேரும்போதுதான் ரொம்ப எரிச்சலாவோ...இல்ல கஷ்டமாவோ இருக்கும்...
ஸ்கேன்ல தெரிஞ்சாலும் அத சுலபமா எடுத்துட மாட்டாங்க...அதுக்கப்புறம்...ஐ வி பி ன்னு ஒரு டெஸ்ட் எக்ஸ் ரே எடுப்பாங்க...அதாவது நம்மளோட உடம்புல ஒரு டைய இன்ஜெக்ட் பண்ணி குறிப்பிட்ட நேர இடவெளியில எக்ஸ் ரே எடுப்பாங்க....அதுல கல்லு எங்க இருக்குன்னு சரியா கன்பார்ம் பண்ண பிறகுதான் அடுத்த நடவடிக்கையா கல்லு உடைக்க கூட்டிக்கிட்டு போவாங்க....
கல்லு உடைக்க எந்த மலைக்கு கூட்டிட்டு போவாங்கன்னெல்லாம் கேக்கக்கூடாது... ஆபரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போயி.....ச்சூச்சூ போற வழியிலேயே ஒரு சின்ன டியூபை விட்டு ஒடைச்சி உறிஞ்சி எடுத்துடுவாங்க....
(அட அத உறிஞ்சு எடுக்க ஒரு மெஷின் இருக்குப்பா....)
ஒருமுறை கல்லு வந்தவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்....இதுவரை கல்லு வராதவங்க....அவங்களும் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்....ஒன்னும் வித்தியாசமில்ல...
பால் சம்பந்தப்பட்ட அயிட்டங்களையும், தக்காளி போன்ற அயிட்டத்தையும் கொஞ்சம் குறைச்சலா எடுத்துக்குறது நல்லது....
இதுல இன்னும் எவ்வளவோ இருக்கு....
இதுக்கு ஆகுற செலவுன்னு பாத்தா....
சாதாரண டாக்டர் பீஸ் மட்டும் - 100 ரூபாய்
முதல்கட்ட மருந்து மாத்திரை - 500
ஸ்கேன் எடுக்க கட்டணம்......... - 500
மறுபடியும் ஒரு ஸ்பெஷல்
டாக்டர் பாக்க பீஸ் செலவு ....... - 200
ஐ வி பி எக்ஸ் ரே டெஸ்ட் க்கு - 1200
ஆபரேஷன் பண்ணனும்னா.....- 12000 - 15000
தோராயமா ஒரு சாதாரண ஆஸ்பத்திரியில பதினஞ்சிலிருந்து பதினெட்டாயிரம் வரைக்கும் செலவாகும்....பெரிய ஆஸ்பத்திரிக்கு போனா ரெண்டு அல்லது மூணு மடங்கு வரைக்கும் செலவாகும்...
இப்போ முடிவு உங்க கையில....
வயிறு நிறைய தண்ணி குடிக்கிறீங்களா???? இல்லீனா இவ்ளோ செலவு பண்ண போறீங்களா?????
பின் குறிப்பு..: சில இதய நோய் உள்ளவர்களுக்கும், கிட்னி பெயிலியர் உள்ளவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே எடுக்கவேண்டும் என்ற அளவு உள்ளது...அவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்....
கல்லில்லா கிட்னி காண்போம்....
அதுவரை....
உங்களிடமிருந்து விடைபெறுவது...
உங்கள் நண்பன்....மொக்கைசாமி....