இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்னிக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம்...ஏதோ உலகமே அழிஞ்சுடற மாதிரி... ஆளாளுக்கு ரொம்ப பரபரப்பா...
கால்நடையாவும், சைக்கிள்ளேயும், பைக்குலேயும், ஆட்டோ, சுமோ, குட்டி யானை, பெரிய யானை...எல்லாத்துலேயும் இந்தப்பக்கமாவும் அந்தப்பக்கமாவும்...
குட்டி போட்ட பூனை ன்னு சொல்லுவாங்களே...
அந்த மாதிரி... நம்ம வேட்பாளருங்களும் அவங்கவங்க அல்லக்கைங்களும்...
சுத்துறது இருக்கே....
சான்சே இல்லீங்க....
எவ்வளவு நல்லவங்க இவங்கெல்லாம்.....
எத்தன பேரு கிளம்பியிருக்கானுங்கன்னு தெரியல...வீட்டுல ஏகப்பட்ட சின்னத்தோட பிட்டு பேப்பருங்க...
நம்ம பொது மக்களுக்காக சேவை செய்ய... பாடுபட...ஆளாளுக்கு பறந்து போட்டி போடுறதபாத்தா....நமக்கு அப்படியே புல்லு, வைக்கோலு, தவிடு, புண்ணாக்கு எல்லாமே அரிக்குதுங்க...
(இத எழுதறதுக்குள்ள அஞ்சுபேரு வந்துட்டாங்க....)
ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஏகப்பட்ட செலவுங்க....தலைவரு, கவுன்சிலரு மட்டுமில்லாம...வேட்பாளர் எல்லாருக்குமே பயங்கர செலவு ....பின்ன இன்னாங்க....கூட வர்ற அல்லக்கைகளுக்கு பிரியாணி பொட்டலத்தையும் சரக்கையும், கொஞ்சம் காசையும் குடுக்கணும்....
இது மட்டுமா??? ஓட்டு போடுற ஜனங்களுக்கு காசு குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க...நிறைய இடத்துல பணம் பட்டுவாடா ஆயிருச்சி....
ஏன்டா...இதுக்கே இவ்வளவு செலவாகுதுன்னா....எம் எல் ஏ.... எம் பி க்கெல்லாம் எவ்வளோ செலவாகியிருக்கும்.... அடங்கப்பா... தலையே சுத்துதே...இதெல்லாம் என்னைக்கு மாறும்.....
வர வர தேர்தல் மேல நம்பிக்கையே இல்லாம போயிருச்சி...
இவனுங்கெல்லாம் ஜெயிச்சி...மக்களுக்கு நல்லது பண்ணப்போறாங்களாம்...
கூரையேறி கோழி புடிக்காதவனுங்கேல்லாம்....கோபுரமேறி கைலாசத்த எப்படி புடிக்கப்போறானுங்க....
எனக்கு தெரிஞ்சி, இந்த உள்ளாட்சி தேர்தல்ல ஒரு சரியான ஆளை தேர்ந்தெடுக்க முடியலன்னா...நமக்கெல்லாம் வருங்காலத்துல நல்ல தலைவருங்க எப்படி கிடைப்பாங்க....நூத்துக்கு ஒரு ரெண்டு பர்சென்ட் தான் நல்ல வேட்பாளருங்களா இருப்பாங்க....அவங்களும் ஜெயிப்பாங்களான்னு தெரியாது....ஆனாலும் நல்லது நடக்குமுன்னு நம்பலாம்....
ஆனால் கட்சி சார்பு இல்லாமல் எல்லாரும் வந்து ஓட்டு போடணும்....இனிமேலும் ஓட்டு போட்டுட்டு சும்மா தேமேன்னு உக்காந்துனு இருந்தா எதுவுமே வேலைக்கு ஆகாது.... ஒவ்வொருத்தரும் கேள்வி கேளுங்க.... நம்முடைய சமுதாயத்துக்கான அன்றாட, அவசியத்தேவைகளை பூர்த்தி செய்ய கேட்கவேண்டியது நமது கடமை.....
எல்லாரும் காலையில எழுந்து பல்லு வெளக்கினாலும் இல்லேன்னாலும் பரவாயில்ல... உங்களோட ஓட்ட மட்டும் மறக்காம போட்டுட்டு வந்துருங்க,..ஏன்னா நம்ம வேலைய நாம ஒழுங்கா செஞ்சாத்தான்... நாம அடுத்தவன கேக்க முடியும்...அதேபோல தயவு செஞ்சு யார் குடுத்தாலும் ஓட்டுக்காக காசு வாங்காதீங்க....ஓட்டுக்கு காசுங்குறது....நம்மோட ஒத்த விரலுக்கு மாட்டுற விலங்கு மாதிரி....சுதந்தர இந்தியாவுல அடிமையா இருக்குறதுக்கு சமம்....
எந்த கட்சியானாலும் பரவாயில்ல....எந்த சின்னமாயிருந்தாலும் பரவாயில்ல....உங்க மனசுக்கு யார் நல்லவங்கன்னு படுதோ....இல்ல யாரு நல்லது செய்வாங்கன்னு நினைக்கிறீங்களோ....அவங்களுக்கு உங்க ஓட்ட போட்டுட்டு...திரும்பி பாக்காம வந்துருங்க....ரிசல்ட்டுக்கு அப்புறம் திரும்பி பாத்துக்கலாம்...
இவர்கள் கொடுப்பதெல்லாம் வாக்குறுதிகள் அல்ல....ஏமாந்துவிடாதீர்கள்....
5 comments:
இவர்கள் கொடுப்பதெல்லாம் வாக்குறுதிகள் அல்ல....ஏமாந்துவிடாதீர்கள்...//
உண்மையான எச்சரிக்கை.,
ராஜபக்சே இவர்களை கோமாளி'ன்னு சொன்னான் ஹி ஹி உண்மைதானோ...???
உண்மைதாங்க இவங்க காட்டுற பரபரப்பை மக்களுக்கு சேவை செய்வதிலிலும், மக்களுக்கு உதவி செய்வதிலும் இருந்தால் இவர்கள் ஓட்டுக்கேட்க வேண்டிய அவசியமே இல்லை...
இவ்வளவு செலவு செய்து ஆட்சியை பிடிக்கும் இவர்கள் 100 சதவீதம் உண்மையானவர்களாக இருபபார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை...
இதில் திரும்ப திரும்ப தோற்றுக் கொண்டிருப்பது வாக்காளர்கள் தான்....
வித்தியாசமான லே அவுட்
Post a Comment