நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Saturday, 1 October 2011

இன்றைய (அ)லட்சியம்... நாளைய (ஏ)மாற்றம்....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 
                   08/07/2011 அன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய இனையதள                கோரிக்கைப்பதிவு...(படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)

இன்று வரை கோரிக்கை பரிசீலனையில்தான் உள்ளது...நடவடிக்கை ஒன்றுமில்லை....இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் எத்தனையோ உயிர்கள் பலியாவதை தடுத்திருக்கலாம்....அதிகாரம் இருப்பவர்கள்...அதிகாரத்தில் இருப்பவர்கள்... அதை ஏன் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தக்கூடாது...????? இதில் அவர்களுக்கு பணம் ஒன்றும் செலவாகப்போவதில்லை.... செய்யவேண்டிய வேலையை செய்யாமலிருப்பதும் குற்றம்தான்....

         


தினமும் எங்கள் மாவட்டத்திலுள்ள பெரிய அதிகாரிகளிலிருந்து சிறிய பியூன்கள்வரை இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், 
மாவட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகம்... 
காவல் போக்குவரத்து நிலையம், 
திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம்....
இவை அனைத்தும் ஒரே சாலையில்தான் இருக்கிறது....
ஆனால் நல்ல சாலையைத்தான் காணவில்லை....


இந்த வழியாகத்தான் திருத்தணி, திருப்பதி, வேலூர் மற்றும் ஊத்துக்கோட்டை செல்லவேண்டும்.... கிட்டத்தட்ட ஐந்திலிருந்து எட்டு கல்லூரிகள் இந்த வழியாகத்தான் அமைந்துள்ளது... 
தினமும் ஒரு விபத்து.... 
இல்லையென்று யாராலும் மறுக்கமுடியாது... ஆனால் போவது பொதுமக்களின் உயிர்தானே....யாருக்கு என்ன கவலை????


போக்குவரத்து போலீஸ் பூத்திற்கு எதிரில் நோ பார்க்கிங்கில்....

கல்லூரி செல்லும் ஆட்டோக்களும் வாகனங்களும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றன...அதில் பயணம் செய்வது மக்களா???அல்லது மாக்களா????என்று தெரியவில்லை....பள்ளி குழைந்தைகளின் ஆட்டோ பயணம் கேட்கவே தேவையில்லை....ஏதாவது ஒரு பெரிய விபத்து நடக்கும் வரை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்....

                                            அளவுக்கு அதிகமாக பயணிகள்....
இதைக்குறித்து மாவட்ட எஸ்பி அவர்களுக்கு புகார் அனுப்பியும் பலனில்லை.... அவரிடமிருந்து, "அனைத்து அதிகாரிகளுக்கும் இதைக்குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்ற பதில் மட்டுமே வந்தது.... (எஸ்பி இடமிருந்து பதிலாவது வந்தது....மாவட்ட கலெக்டர் கிட்ட இருந்து ஒரு பதிலும் இல்லை)....ஆனால் இது தினமும் நடக்கிற கூத்தாகத்தான் உள்ளது....
ஏதோ இந்த இடம் மட்டும்தான் என்றல்ல....ஒட்டுமொத்த திருவள்ளூர் மாவட்டமே இப்படித்தான் அலங்கோலமாக இருக்கிறது...அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் திருவள்ளூர் மாவட்டத்தை கேங் ரேப் செய்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை....(இன்னும் எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை)

நீங்களே பாருங்கள்....அள்ளிய குப்பைகளை பிரதான சாலைவழியாக...தெளித்து செல்லும் நகராட்சி குப்பைவண்டி....செம கப்பு...எதையாவது போட்டு மூடி எடுத்துட்டு போனால் என்ன?????
காட்சி மாற்றத்தை விரும்பி, ஆட்சி மாற்றத்தை வழங்கினார்கள் மக்கள்....
ஆனால் ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை....
இன்னும் நம்பிக்கை இருக்கின்றது....மாறுமென்று....

ஒரு நன்மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது...

இன்றைய (அ)லட்சியம்
நாளைய (ஏ)மாற்றம்.... 


                                                                    அன்புடன் 


2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசிடம் இப்படி நாம் தினமும் தன்னுடைய குறைகளை சொன்னாலும் அவர்களின் காதுகளில் விழாது...

அப்படி செய்தாலும் ஒறிரு நாளில் செய்துவிட்டு
மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.

காவல் துறையும் பணம் ஒன்றே குறிக்கொளாக கொ்ண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியாளரே இப்படி இருக்கும் போது அவரி கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்...

கண்டிப்பாக நாம் தினமும் ஏமாற்றத்தைதான் சந்தித்தாக வேண்டும்..

சக்தி கல்வி மையம் said...

சவுக்கடிப் பதிவு..

டேய் அதிகாரிகளே திருந்துங்கடா..

நானும் திருவள்ளுரை ச் சேர்ந்தவன்தான்..

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்