நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Tuesday 25 October, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்....


தீபங்களின் ஒளி பரவட்டும்...
மனிதருள் மகிழ்ச்சி மலரட்டும்...


சந்தோசம் என்கிற தீப ஒளி ஏற்றுங்கள்...
வருத்தம் என்கிற காரிருள் விலகிவிடும்... 

                                         

என்னுடன் இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

Monday 24 October, 2011

கரிய மேகத்தின் உரிய பதில்...

எ(ன்ன)ருமை மக்களே....
உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன்...
உள்ளம் அறிந்தேன்...
மழையிடம் மனம் திறந்தேன்...

இதோ இனி மழையின் பதில்...


நான்தான் நீங்கள் நேசிக்கும் மழை...
நான் சொல்லவும் சில உண்டு...
இப்போதுமட்டுமல்ல....எப்போதுமே.....


உங்களுக்கும் எனக்கும் இடையே மண்ணிலுள்ள நீரை எடுத்து என்னிலுள்ள நீரை மரம் என்கிற பாலம் வழியாகவே தந்துவந்தேன்... அவற்றையெல்லாம் அழித்து மரப்பாலங்கள் அமைத்துவிட்டீர்கள்...நீங்களே எண்ணிப்பாருங்கள்...இப்போதெல்லாம் எனக்கு வருவதற்கே வழியில்லை....
முதலில் மரங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்...பிறகு வருகிறேன்....


நாங்கள் மேகத்திலிருந்து விழும்போது...எங்களின் ஒவ்வொரு துளியும் கன்னித்துளிகள்தான்...உங்களின் மாசுக்கள் எங்களை காற்றிலேயே  கற்பழித்துவிடுகின்றன...எங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானபோது நாங்கள் எப்படி வெளியே வரமுடியும்...மாசைக்கட்டுபடுத்துங்கள்...பிறகு
வருகிறேன்....


முன்பெல்லாம்...நான் பூமியின் மீது விழுமுன்னே....கைகோர்த்த காதலர்கள்...என்னில் நனைந்தபடி...ரசித்தபடி....காதலினை வளர்ப்பார்கள்....சிலிர்ப்பார்கள்....இருட்டறையில் கைகோர்க்கும் கள்ளக்காதல் கனிந்து வருவதால்....என் உண்மைக்காதலர்கள் எங்கே போனார்கள்...???மனசைக்கட்டுப்படுத்துங்கள்....பிறகு வருகிறேன்.....


குளம், குட்டை, ஏரி, ஆறு....என நான் பயணிக்கவும், வாசமிகு பூக்களுடன் வாசம் செய்யவும் ஏராளமான இடமிருந்தது....இன்றோ....என்னை அணைக்கின்ற பூமியும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்துள்ளதால் என்னால் தங்கவும் முடியவில்லை....தாங்கவும் முடியவில்லை....தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளுக்கு விடை கொடுங்கள்...பிறகு வருகிறேன்....


சுத்தமாக வரும் நான், அசுத்தமான மத்திய மாநில அரசுத்துறைகளின் பள்ளங்களில் விழுந்து...நிறைந்து இன்னும் அசுத்தமான சாக்கடையில் கலந்துவிடுகிறேன்....உங்களுக்கு பணத்தையும், பொருளையும், தங்கத்தையும் சேர்த்துவைப்பதே பெரும் வேலையாக இருக்கிறது...என்னை சேர்க்க மனமில்லாமல் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாய் போகிறேன்...
சேர்த்துவைக்க முயலுங்கள்.... பிறகு வருகிறேன்....


நீங்கள் என்று என்னை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தீர்களோ....அன்றே என்னை விற்று விட்டீர்கள் என்றாகிவிட்டது....இப்போது அழுது புலம்பி என்னபயன்...??? இருந்தும் நான் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறேன்....எனது கோபம் அதிகமாகும்போது வெள்ளமாய் வந்து தாண்டவமாடிவிடுகின்றேன்...இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.... பிறகு வருகிறேன்.....


நல்ல மழை வேண்டுமென்றால்....
உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்து....
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யுங்கள்....
நீங்கள் கேட்காமல்.... நானே வருவேன்.....

இப்படிக்கு 
மழை.... 

               அன்புடன்..


Sunday 23 October, 2011

மழை....

வந்துவிடு மழையே....



முளையில் தெரிந்த 
எங்கள் பயிர்
விளையாமல் போகிறது....
வந்துவிடு மழையே...



வாடிய பூக்கள் 
வற்றிய குளம் 
தேடும் மீன்கள் 
வந்துவிடு மழையே....

ஓ! இருட்டைத்தின்ற 
குருட்டு மேகமே....
பிளந்த பூமியில் 
விழுந்த துளிகளை 
மழையென்று நினைத்து
மௌனமானாயோ....???

                                          

அது வேறொன்றுமல்ல...
எம்மக்களின் 
மெலிந்த தேகத்தில் 
வழிந்த வேர்வையும்....
ஒட்டிய கன்னத்தின் 
ஒட்டாத கண்ணீர்த்துளியும்தான்....



மழையே....
உன்னை காதலித்ததால் 
காத்திருக்க வைத்தாயோ..???....
அல்லது 
நீ ஒரு கவிதை என்பதால் 
பொய்த்துப்போனாயோ???



வந்து எங்களை வாழ்விக்க 
மறுத்துவிடாதே....

எங்கள் உழவின் ஏர்களை
வேரறுத்துவிடாதே
வந்துவிடு மழையே....
----------------------------------------------


Saturday 15 October, 2011

வந்தார்கள்...சென்றார்கள்..மீண்டும் வருகிறார்கள்..

இன்னிக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம்...ஏதோ உலகமே அழிஞ்சுடற மாதிரி... ஆளாளுக்கு ரொம்ப பரபரப்பா...
கால்நடையாவும், சைக்கிள்ளேயும், பைக்குலேயும், ஆட்டோ, சுமோ, குட்டி யானை, பெரிய யானை...எல்லாத்துலேயும் இந்தப்பக்கமாவும் அந்தப்பக்கமாவும்...
குட்டி போட்ட பூனை ன்னு சொல்லுவாங்களே...
அந்த மாதிரி... நம்ம வேட்பாளருங்களும் அவங்கவங்க அல்லக்கைங்களும்...
சுத்துறது இருக்கே....
சான்சே இல்லீங்க.... 
எவ்வளவு நல்லவங்க இவங்கெல்லாம்.....



எத்தன பேரு கிளம்பியிருக்கானுங்கன்னு தெரியல...வீட்டுல ஏகப்பட்ட சின்னத்தோட பிட்டு பேப்பருங்க...

நம்ம பொது மக்களுக்காக சேவை செய்ய... பாடுபட...ஆளாளுக்கு பறந்து போட்டி போடுறதபாத்தா....நமக்கு அப்படியே புல்லு, வைக்கோலு, தவிடு, புண்ணாக்கு எல்லாமே அரிக்குதுங்க...
(இத எழுதறதுக்குள்ள அஞ்சுபேரு வந்துட்டாங்க....)



ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஏகப்பட்ட செலவுங்க....தலைவரு, கவுன்சிலரு மட்டுமில்லாம...வேட்பாளர் எல்லாருக்குமே பயங்கர செலவு ....பின்ன இன்னாங்க....கூட வர்ற அல்லக்கைகளுக்கு பிரியாணி பொட்டலத்தையும் சரக்கையும், கொஞ்சம் காசையும் குடுக்கணும்....
இது மட்டுமா??? ஓட்டு போடுற ஜனங்களுக்கு காசு குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க...நிறைய இடத்துல பணம் பட்டுவாடா ஆயிருச்சி....



ஏன்டா...இதுக்கே இவ்வளவு செலவாகுதுன்னா....எம் எல் ஏ.... எம் பி க்கெல்லாம் எவ்வளோ செலவாகியிருக்கும்.... அடங்கப்பா... தலையே சுத்துதே...இதெல்லாம் என்னைக்கு மாறும்.....
வர வர தேர்தல் மேல நம்பிக்கையே இல்லாம போயிருச்சி...
இவனுங்கெல்லாம் ஜெயிச்சி...மக்களுக்கு நல்லது பண்ணப்போறாங்களாம்...
கூரையேறி கோழி புடிக்காதவனுங்கேல்லாம்....கோபுரமேறி கைலாசத்த எப்படி புடிக்கப்போறானுங்க....

எனக்கு தெரிஞ்சி, இந்த உள்ளாட்சி தேர்தல்ல ஒரு சரியான ஆளை தேர்ந்தெடுக்க முடியலன்னா...நமக்கெல்லாம் வருங்காலத்துல நல்ல தலைவருங்க எப்படி கிடைப்பாங்க....நூத்துக்கு ஒரு ரெண்டு பர்சென்ட் தான் நல்ல வேட்பாளருங்களா இருப்பாங்க....அவங்களும் ஜெயிப்பாங்களான்னு தெரியாது....ஆனாலும் நல்லது நடக்குமுன்னு நம்பலாம்....


ஆனால் கட்சி சார்பு இல்லாமல் எல்லாரும் வந்து ஓட்டு போடணும்....இனிமேலும் ஓட்டு போட்டுட்டு சும்மா தேமேன்னு உக்காந்துனு இருந்தா எதுவுமே வேலைக்கு ஆகாது.... ஒவ்வொருத்தரும் கேள்வி கேளுங்க.... நம்முடைய சமுதாயத்துக்கான அன்றாட, அவசியத்தேவைகளை பூர்த்தி செய்ய கேட்கவேண்டியது நமது கடமை..... 

எல்லாரும் காலையில எழுந்து பல்லு வெளக்கினாலும் இல்லேன்னாலும் பரவாயில்ல... உங்களோட ஓட்ட மட்டும் மறக்காம போட்டுட்டு வந்துருங்க,..ஏன்னா நம்ம வேலைய நாம ஒழுங்கா செஞ்சாத்தான்... நாம அடுத்தவன கேக்க முடியும்...அதேபோல தயவு செஞ்சு யார் குடுத்தாலும் ஓட்டுக்காக காசு வாங்காதீங்க....ஓட்டுக்கு காசுங்குறது....நம்மோட ஒத்த விரலுக்கு மாட்டுற விலங்கு மாதிரி....சுதந்தர இந்தியாவுல அடிமையா இருக்குறதுக்கு சமம்....



எந்த கட்சியானாலும் பரவாயில்ல....எந்த சின்னமாயிருந்தாலும் பரவாயில்ல....உங்க மனசுக்கு யார் நல்லவங்கன்னு படுதோ....இல்ல யாரு நல்லது செய்வாங்கன்னு நினைக்கிறீங்களோ....அவங்களுக்கு உங்க ஓட்ட போட்டுட்டு...திரும்பி பாக்காம வந்துருங்க....ரிசல்ட்டுக்கு அப்புறம் திரும்பி பாத்துக்கலாம்...

இவர்கள் கொடுப்பதெல்லாம் வாக்குறுதிகள் அல்ல....ஏமாந்துவிடாதீர்கள்....
அது அவர்களுடைய வேலை....அவர்கள் கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்....அவர்களின் கடைமையை அவர்கள் செய்யவேண்டும்....அவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்யாமலிருப்பது கூட சட்டப்படி குற்றமே....

                                                                                                

Sunday 9 October, 2011

கல்லுக்குள் ஈரம்....

இன்னிக்கு தேதியில வீட்ல சட்னியில கல்லு இருக்குதோ இல்லையோ....வீட்ல ஒருத்தருக்கு கிட்னியில கல்லு இருக்குது....இதுக்கு முக்கிய காரணம், முக்காத காரணம் எல்லாம் நாம தண்ணிய சரியா குடிக்காததுதான்....ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து லிட்டர் வரைக்கும் தண்ணி குடிக்கணும்ன்னு டாக்டருங்க சொல்றாங்க...



இது மட்டும்தான் காரணமான்னு கேட்டா....இல்லேன்னுதான் சொல்லணும்...
ஏன்னா...ஒருத்தருக்கு ச்சூச்சு வந்தா உடனே போயிரனும்...



அப்படி இல்லாம வேலை இருக்கு அப்புறமா போகலாம்ன்னு அடக்கி வச்சாலோ....இல்ல..எங்கேயாவது பஸ்லயோ, டிரைன்லையோ ரொம்ப தூரம் போகும்போது இத போகமுடியாம அடக்கி வைக்கிறதோ கூடாது....



நம்ம ச்சூச்சூவுல இருக்குறதெல்லாம் உப்புங்கதான்...அதுவும் நம்ம உடம்புல இருந்து வெளியேபோற தேவையில்லாத கழிவுங்க...ரொம்ப நேரம் அடக்கி வச்சா அதுல இருக்கிற உப்புங்கெல்லாம் வீழ்படிவு ஆகி...ஒன்னோட ஒன்னு கூடி கும்மி அடிக்கும்போதுதான் அது கல்லா மாறுது....அதுமட்டுமில்லாம குடிக்கவேண்டிய அளவு தண்ணிய குடிக்கலன்னா  யூரின் ரொம்ப ஸ்ட்ராங்கா மஞ்சள் கலர்ல போகும்....அப்படி இருந்தாலும் உள்ளுக்குள்ள கும்மி அடிக்க ஆரம்பிச்சிடும்...



இந்த கிட்னியில இருக்குற கல்ல சாதாரணமா கிட்னி ஸ்டோன்ன்னு சொன்னாலும்...அதனோட பேரு "ரீனல் கால்குலை"ங்குறதுதான் சரி...ஒரு கல்லு இருந்தா "கால்குலஸ்"... அதிகமா இருந்தா "கால்குலை"...இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சைசுல இருக்கும்... இதை நெப்ரோலித்தியாசிஸ் என்றும் சொல்லுவார்கள்...(தவறை சுட்டிக்காட்டி இதையும் ஞாபகப்படுத்திய எங்கள் குரு..பாலா சார் அவர்களுக்கு நன்றி.....அவரது கமெண்ட்டை பார்க்கவும் )

சரி கல்லு இருக்குறத எப்படி தெரிஞ்சிக்கிறது....???

கல்லு இருந்தா ஒரு வலி வரும் பாருங்க....சும்மா சொல்லக்கூடாதுங்க....ஆளை உருட்டி எடுத்துரும்... 
நடு முதுகுக்கு கொஞ்சம் கீழ, வலது பக்கமாகவோ...இல்லேன்னா இடது பக்கமாவோ ஆரம்பிச்சி(கல்லு இருக்குற பக்கம்)...அப்படியே முன்னாடி அடி வயிறு வரைக்கும் வலி பரவும்...நிமிந்து ஒக்காரவே முடியாது...
இந்த கிட்னி கல்லு, கிட்னியிலிருந்து சிறுநீர் குழாய் வழியா பிரயாணம் பண்ணி சிறுநீர் பைக்கு வரும்போது ரொம்ப வலிக்கும்....ரொம்ப மோசமான வலின்னு சொன்னா....அந்த ஸ்டோன் சிறுநீர் குழாயும் சிறுநீர்ப்பையும் சேருற இடத்துல மாட்டிக்குச்சுன்னா வருமுங்க....



இதனோட சைஸு 2 mm ல இருந்து ஆரம்பிச்சி சென்டிமீட்டர் அளவுக்கு கூட இருக்கும்...சிலபேரு வீடு கட்டுற அளவுக்கு கல்ல வெச்சிருப்பாங்க...

ஸ்கேன் எடுத்துப்பாத்தா.... எத்தனை இருக்கு...எங்கெங்க இருக்கு...எவ்வளோ பெரிசா இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்... 5 அல்லது 6 மில்லி மீட்டர் சைசுல ஒரு கல்லு இருந்தா அது தானா வெளியே வந்துடும்....அதாவது நிறைய தண்ணி குடிச்சா வந்துடும்... அதைவிட பெரிய சைசுல இருந்தா அதுவா வராது...நாமதான் வரவெக்கணும்...அதுவும் ஒடச்சிதான் எடுக்கணும்....சில நேரம் ஒன்னுக்கோட இந்த கல்லு வெளியேரும்போதுதான் ரொம்ப எரிச்சலாவோ...இல்ல கஷ்டமாவோ இருக்கும்...



ஸ்கேன்ல தெரிஞ்சாலும் அத சுலபமா எடுத்துட மாட்டாங்க...அதுக்கப்புறம்...ஐ வி பி ன்னு ஒரு டெஸ்ட் எக்ஸ் ரே எடுப்பாங்க...அதாவது நம்மளோட உடம்புல ஒரு டைய இன்ஜெக்ட் பண்ணி குறிப்பிட்ட நேர இடவெளியில எக்ஸ் ரே எடுப்பாங்க....அதுல கல்லு எங்க இருக்குன்னு சரியா கன்பார்ம் பண்ண பிறகுதான் அடுத்த நடவடிக்கையா கல்லு உடைக்க கூட்டிக்கிட்டு போவாங்க....
கல்லு உடைக்க எந்த மலைக்கு கூட்டிட்டு போவாங்கன்னெல்லாம் கேக்கக்கூடாது... ஆபரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போயி.....ச்சூச்சூ போற வழியிலேயே ஒரு சின்ன டியூபை விட்டு ஒடைச்சி உறிஞ்சி எடுத்துடுவாங்க....
(அட அத உறிஞ்சு எடுக்க ஒரு மெஷின் இருக்குப்பா....) 



ஒருமுறை கல்லு வந்தவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்....இதுவரை கல்லு வராதவங்க....அவங்களும் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்....ஒன்னும் வித்தியாசமில்ல...

பால் சம்பந்தப்பட்ட அயிட்டங்களையும், தக்காளி போன்ற அயிட்டத்தையும் கொஞ்சம் குறைச்சலா எடுத்துக்குறது நல்லது....

இதுல இன்னும் எவ்வளவோ இருக்கு....

இதுக்கு ஆகுற செலவுன்னு பாத்தா....

சாதாரண டாக்டர் பீஸ் மட்டும் - 100  ரூபாய் 
முதல்கட்ட மருந்து மாத்திரை -  500
ஸ்கேன் எடுக்க கட்டணம்......... -  500 
மறுபடியும் ஒரு ஸ்பெஷல் 
டாக்டர் பாக்க பீஸ் செலவு ....... -  200 
ஐ வி பி எக்ஸ் ரே டெஸ்ட் க்கு -   1200
ஆபரேஷன் பண்ணனும்னா.....-   12000 - 15000 

தோராயமா ஒரு சாதாரண ஆஸ்பத்திரியில பதினஞ்சிலிருந்து பதினெட்டாயிரம் வரைக்கும் செலவாகும்....பெரிய ஆஸ்பத்திரிக்கு போனா ரெண்டு அல்லது மூணு மடங்கு வரைக்கும் செலவாகும்...

இப்போ முடிவு உங்க கையில....

வயிறு நிறைய தண்ணி குடிக்கிறீங்களா???? இல்லீனா இவ்ளோ செலவு பண்ண போறீங்களா?????


பின் குறிப்பு..: சில இதய நோய் உள்ளவர்களுக்கும், கிட்னி பெயிலியர் உள்ளவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே எடுக்கவேண்டும் என்ற அளவு உள்ளது...அவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்....

கல்லில்லா கிட்னி காண்போம்....
அதுவரை....
உங்களிடமிருந்து விடைபெறுவது...
உங்கள் நண்பன்....மொக்கைசாமி....


Friday 7 October, 2011

"ஆப்பிளை"த்தந்த நெல்லிக்கனி...

ஏவாள் தின்னாத ஆப்பிள் ஒன்று கீழே விழ...
புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் ஐசக் நியூட்டன்...


அதே ஆப்பிளை வைத்து இந்த புவியை ஈர்த்துவிட்டார் ஸ்டீவ் ஜோப்ஸ்......


கல்லூரி படித்த மணமாகாத மாணவிக்கு பிறந்த இவர் ஜோப்ஸ் தம்பதிகளால் வளர்க்கப்பட்டார். தத்து எடுக்கப்பட்ட சில நாட்களிலேயே இவர் பெற்றோர் திருமணம் செய்துக்கொண்டனர்...





இது இவரது இளம் வயதில்....கண்களில் கனவுகளுடன்....



ஐ பாட்...

ஐ பேட்....

ஐ போன்...

ஆகிய P என்ற எழுத்தில் பிரபலமான படைப்புகளைக்கொடுத்த இவரின் கணையம் அதே P என்ற எழுத்தால் PANCREAS புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய வேலையை இரண்டாவது முறையாக விட்டுவிட்டார்....



இவருக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு....




நான் பிறந்த வருடத்தில் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த இவர்....
நான் பிறந்த மாதத்தில் இயற்கை எய்தினார்....


இவர் மனிதர்களை இரண்டு விதமாக பிரித்தார்...ஒன்று ஆப்பிள் மக்கள்... மற்றவர்கள் ஆப்பிள் இல்லாதோர்.....



இனி ஒவ்வொரு ஆப்பிள் சாதனங்களையும் உபயோகப்படுத்தும்போது இவரின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது...இவர் ஒவ்வொன்றிலும் ஒன்றியுள்ளார்...


இன்று ஆப்பிள்.....



நம்ம மக்கள் என்ன பண்றாங்க பாருங்க....முக்கியமா தந்தைக்குலம்...


இந்தப்பதிவை ஸ்டீவ் ஜோப்ஸ்க்கு சமர்ப்பிக்கிறேன்.............



Wednesday 5 October, 2011

ஒரு பொம்மலாட்டம் நடக்குது...

பல்லவி :- நான் அடிக்கிறா மாதிரி அடிக்கிறேன்..
                       நீ அழுவுறா மாதிரி அழு...
                       நீயும் அடிக்கிறாமாதிரி அடி....
                       நானும் அழுவுறாமாதிரி அழுவுறேன்....  

ஏன்னா...இதனால நமக்கு ஒரு நஷ்டமும் இல்ல....கஷ்டமும் இல்ல...

நானும் நீயும் மாறி மாறி திட்டிக்கிட்டாலும் பரவாயில்ல...காரி துப்பிக்கிட்டாலும் பரவாயில்ல...இந்த நாட்ட ஆள முடியலேன்னாலும்..இந்த பதவியில உக்காந்து....நம்ம மாநிலத்தையாவது ஆளணும், அள்ளனும்...அதனால (மேலே உள்ள பல்லவியை படிக்கவும்)

இப்ப கரண்ட்டு கட்....கரண்ட்டு கட்ன்னு...ஆளாளுக்கு குதிக்கிராங்களே... ஆனா நீ மட்டும் எலக்சன் வரைக்கும் சும்மா இருந்துட்டு...எலக்சன்ல ஜெயிக்கனும்ன்னு என்னை கேவலமா திட்டுன... இப்ப நான் சும்மா இருந்தா எல்லா பயலுகளும் என்ன தப்பா சொல்ல மாட்டாங்களா...அதனால  (மேலே உள்ள பல்லவியை படிக்கவும்)

நான் வந்தப்ப உன்னயும் உங்க ஆளுங்களையும் உள்ள போட்டேன்ல...அந்த மாதிரி ஏற்கெனவே நாம பேசிவச்சதப்போலவே நீ வந்தப்ப என்னையும் எங்க ஆளுங்களையும் உள்ள போட்டுட்ட....இது நம்மளோட கபடி விளையாட்டுன்னு 'தங்கம்' தொடர் வெற்றிமாறனுக்கு கூட தெரியல....அவ்வளவு ஏன்...வெண்ணிலா கபடிக்குழுவுக்கு கூட தெரியல....அதனால  (மேலே உள்ள பல்லவியை படிக்கவும்)

உன்னோட சொத்தையும் என்னோட சொத்தையும் யாராலேயும் பறிமுதல் செய்யமுடியாது....நமக்குதான் அந்த அளவுக்கு வசதி கிடையாதே....நாம எலக்க்ஷன்ல நிக்கும்போது எத எத கணக்கு காட்டினோம்னு நமக்கு தெரியாதா... 
AMMA
http://www.elections.tn.gov.in/Affidavits/139/J%20JAYALALITHAA.pdf


IYYA
http://www.elections.tn.gov.in/Affidavits/168/M.Karunanithi%20%20Affidavit.pdf



வேணுமின்னா ஏதாவது ஒரு வீட்ட கவர்மெண்ட்டுக்கு எழுதிகுடுத்தா போச்சி...ஜனங்களும் நம்மள தியாகின்னு சொல்லுவாங்க...தியாகி பென்ஷனும் வாங்கலாம்...அதனால (மேலே உள்ள பல்லவியை படிக்கவும்)

நாம நேர்ல திட்டிக்கிட்டா அது லைவ் ஷோ மாதிரி இருக்கும்... ஆனா ஆளுக்கு ஒரு டிவி வச்சிக்கிட்டு அதுல திட்டிக்கிற சுகமே தனி...அதுல ரீப்ளே காட்டலாம்...தேவைக்கேத்த மாதிரி ஹைலைட்ஸ் போடலாம்...வேணுமின்னா மறு ஒளிபரப்பு கூட செய்யலாம்...அதனால (மேலே உள்ள பல்லவியை படிக்கவும்)

இப்படி எழுதினா எழுதிக்கிட்டே போகலாம்....

அது சரி....இது யார் யாருக்கு எழுதியது......????

இத பாத்து தெரிஞ்சிக்கோங்க......


யாராவது யாருக்காவது எழுதட்டும்....நான் வேலைக்கு போகணும்....

நீ என்கிட்டே கேட்ட தஞ்சம்...
அதனால நான் வாங்குனேன் லஞ்சம்...

உன்னோட இந்த சூழல் ...
என்ன பன்னவச்சது ஊழல்...

அட யாருப்பா அது...இந்த ட்டி ஆர உள்ள விட்டது....சே...நேரங்கெட்ட நேரத்துல வந்து இம்சைய்யா.....

போயிட்டு வரேங்க....டூட்டிக்கு டைமாச்சி...



Monday 3 October, 2011

படிச்சவன் பாடம் நடத்துறான்..... படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்...

வாத்தியார் புள்ள மக்கு.....

போலிஸ்காரன் புள்ள திருடன்....

டாக்குட்டரு புள்ள சீக்காளி....

இவையெல்லாம் விளையாட்டாக கிராமப்புறங்களில் சொல்லப்படுபவை....

இன்றைய நிலைமை....இதைவிட படு மோசமாக இருக்கிறது....

புதுச்சேரியின் மைந்தர்களுக்கெல்லாம் கல்வி புகட்டக்கூடிய பொறுப்பு கல்வி அமைச்சராக உள்ளவர் கையில்தான் உள்ளது....அவருடைய கல்வித்தகுதிதான் இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது....


கல்வி அமைச்சராக ஆனபிறகு இவர் இப்போதுதான் தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதப் போகிறார்....
தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியலிலும், சமூக அறிவியலிலும் கோட்டை விட்ட இவர் இப்போது கோட்டைக்கு அமைச்சராக வந்திருக்கிறார்....

தமிழில் 48 மதிப்பெண்களும்....
ஆங்கிலத்தில் 47 மதிப்பெண்களும்...
கணக்கில் 75 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்...( பின்ன...அரசியல்ல நிறைய கணக்கு பண்ணனுமில்ல....). இப்போது அறிவியல் தேர்வை மட்டும் எழுதியுள்ளார்...இதில் 60 மதிப்பெண் வருமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்....(ஏம்பா...கல்வி அமைச்சருக்கு காட்டிட்டுத்தானே கேள்வித்தாளை வெளியிட்டீங்க???) டவுட்டு....!!!! 

இந்த முறை சமூக அறிவியல் எழுத முடியாம போயிருச்சி....(எதோ ஒரு வேலை விஷயமா போய்ட்டதால...)

பத்தாவது போனா என்ன???? இப்போது திறந்தவெளி தொலைதூரக்கல்வி மூலமாக (ஏற்கெனவே கல்வி தொலை தூரம்தான்) சென்னை பல்கழகத்தில் இளங்கலை (வரலாறு)  சேர்ந்துள்ளார்....(2011 - 2012 ). 

இதற்கு அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் என்னவென்றால்....
"எத்தனையோ பேர் என்னை டிகிரிய காசு குடுத்து வாங்க சொன்னாங்க...ஆனா நான்தான் நேர்வழியில டிகிரிய வாங்கனும்ன்னு சொல்லி இப்ப சென்னையில சேர்ந்தேன்...."

இப்ப என்னோட கேள்வி என்னான்னா??????????????

காசு குடுத்து டிகிரிய வாங்க சொன்னது எத்தனைபேர்....???

யார் யார்????

அப்போ படிக்காம, காசு குடுத்தா டிகிரி கிடைக்குதுன்னு நீங்களே ஒத்துக்குறீங்களா????

அப்படி உங்ககிட்ட சொன்னவங்களை என்ன பண்ணீங்க....?????
அதாவது அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க?????

இந்தமாதிரி குறுக்கு வழிய சொல்லிகுடுக்குறவங்கதான் உங்க கூட நெருக்கமா இருக்குறாங்களா???

திருட்டு சான்றிதழ் வழங்கும் கும்பல் எதையாவது கைதுசெய்தீர்களா????

எதுக்கு கேக்குறேன்னா....எனக்கு ஒரு சர்டிபிகேட் தேவைப்படுது.....அதனாலதான்.....அவ்வவ்வ்வ்வ் ......

இங்க நம்மளோட மத்த அமைச்சருங்கள பாருங்க....

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்....ஆரோக்கியசாமி....



நிதி அமைச்சர்... அண்ணன் கோடீஸ்வரன்....

                                               

போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் நட.. ராஜன்.....


கால்நடை மற்றும் விவசாயத்துறை அமைச்சர்....அண்ணன் மண்ணாங்கட்டி...



கதர் மற்றும் கைத்தறி துறை அமைச்சர்....அண்ணன் அம்மனாண்டி.....


பாதுகாப்பு மற்றும் காவல்துறை அமைச்சர்...அண்ணன் கபாலி....


இவங்கெல்லாம் ஒரு சாம்பிள்தான்.... நிஜத்துல நிறைய பேரு இருக்காங்க...இவங்களுக்கெல்லாம் கல்வித்தகுதிய கட்டாயமாக்கணும்.அதுமட்டுமில்லாம....எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வச்சுதான் தேர்ந்தெடுக்கணும்...ஏன்னா இன்னிக்கி இருக்கிற நிலமையில ஒரு சாதாரண குடிமகனுக்கு எந்த கட்சியிலேயும் சீட் குடுக்குறதில்ல....அவங்களோட பணபலம்... ஜாதி ஓட்டு...ஆள் பலம்...இதெல்லாம் வச்சிதான் சீட் குடுக்குறாங்க...
இன்னிக்கு இந்தியாவுல இன்னொரு காந்தி ஏன் உருவாகவில்லை....???
பின்ன என்னங்க??? ஊர் புல்லா கோட்சேவா இருந்தா அவருமட்டும் எப்படி வெளியே வருவாரு....க்கும்...

இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமுங்களா?????
வேற யாருமில்ல....நீங்களும் நானும்தான்....அதாவது பொதுமக்கள்தான்....
இன்னும் ஐந்து வருஷம் டைம் இருக்கு...நல்லா ரூம் போட்டு யோசிங்க....

வரட்டுமா.....

வயிற்றெரிச்சலுடன்


ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்