நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Tuesday 1 November, 2011

கிருத்துவமும், மருத்துவமும், திருத்துவமும்....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அதாவதுங்க...இது யாரையும் குறை சொல்லுறதுக்காகவோ...அல்லது தப்பு கண்டுபிடிக்கிறதுக்காகவோ இல்லீங்க.... யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு சொன்னதெல்லாம் போயி... இன்னிக்கி யாம் பெரும் இன்பம் எனக்கு மட்டும்ன்னு ஆயிருச்சி...

மொதல்ல ஒரு சின்ன வரலாற்று குறிப்புகளை மட்டும் பாக்கலாம்..

இது ஒரு சாம்பிள்தான்...எங்க பகுதியில இருக்கிறத மட்டும் சொல்லப்போறேன்...உங்க பகுதியில இருக்கிறத நீங்களே போய் தெரிஞ்சிக்கோங்க....

சி எஸ் ஐ கௌடி மேல்நிலைப்பள்ளி


                                        பளபளக்கும் புதிய பள்ளிக்கூட கட்டிடம்...

இந்த பள்ளி, சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட அதே 1857 ஆம் ஆண்டு ப்ரீ சர்ச் ஆப் ஸ்காட்லான்ட் மிஷனால் திருவள்ளூரில் தொடங்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டுவந்த இந்த பள்ளிக்கூடம்  இப்போது மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு தன் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது...பல கிருத்துவ ஸ்தாபனத்தால் பராமரிக்கப்பட்ட இந்த பள்ளி இப்போது சி எஸ் ஐ சென்னை பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது...இப்போதைய பேராயரான திரு.V.தேவசகாயம் அவர்கள் இந்த பள்ளியில் படித்தவர்தான்...இதே போன்ற ஒரு பள்ளி திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டிலும் அதே கால கட்டத்தில் நிறுவப்பட்டு இன்றும் நடத்தப்பட்டு வருகின்றது...

சி எஸ் ஐ கௌடி நினைவாலயம்...


                                புதுப்பொலிவுடன் கௌடி நினைவாலயம்....

இந்த ஆலயம் 1925 ஆம் ஆண்டு ஆயர்.திரு. வில்லியம் கௌடி அவர்களின் நினைவாக கட்டப்பட்டது...
இதே போல ஈக்காட்டை சேர்ந்த சி எஸ் ஐ ஆலயமும் மிகவும் பழமை வாய்ந்தது..


                                              தூய வெஸ்லி ஆலயம் ஈக்காடு...

இப்போது இந்த இரண்டு ஆலயங்களும் சி எஸ் ஐ சென்னை பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது....

சி எஸ் ஐ மருத்துவமனை...ஈக்காடு


                        பொலிவிழந்து காணப்படும் ஈக்காடு மருத்துவமனை....

நூற்றாண்டு விழாவினைக்கடந்து நூற்று இருபத்தைந்து ஆண்டுகளைத்தாண்டி நடந்து வருகிறது...இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் உலக அளவில் தங்களுடைய பணியினை செய்து வருகிறார்கள்...மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த இந்த மருத்துவமனை இப்போது மிகவும் நலிந்து நோயுற்று தன்னை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் இருக்கின்றது...

இந்த மருத்துவமனையின் இன்னொரு கிளை திருவள்ளூரில் இருக்கிறது. 2006  ஆம் ஆண்டு கட்டப்பட்ட அதுவாவது நன்றாக இருக்கிறதா என்றால்... நீங்களே பாருங்கள்...


      நான்கு வருடங்கள் கூட நிலைக்காத டைல்ஸ் பெயர்ந்த நிலையில்...

 எத்தனையோ பேர் வந்து தன் நோயை குணமாக்கிக்கொண்டு சென்ற இந்த மருத்துவமனை இன்று நேற்றல்ல...ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நிலையில்தான் இருக்கிறது....இந்த மருத்துவமனைகளும் அதே சி எஸ் ஐ சென்னைப்பேராயத்தின் ஓர் அங்கம்தான்...

இதைவிட ஒரு செய்தி இருக்கிறது....இதை என்னவென்று சொல்லுவது...

எங்கள் ஊரின் பக்கத்தில் இருக்கும் ஆந்திர மாநிலத்தின் பார்டரில் இருக்கும் நகரியில் ஒரு சி எஸ் ஐ மருத்துவமனை உள்ளது....ஓராசிரியர் பள்ளிபோல அந்த மருத்துவமனைக்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும்தான்...இப்போதெல்லாம் ஒரு கிளினிக்கிலேயே இரண்டுக்கு மேற்பட்ட டாக்டர்கள் இருக்கிறார்கள்...இதுவும் அதே சி எஸ் ஐ சென்னைப்பேராயத்தின் ஓர் அங்கம்தான்... 

தற்போதைய பேராயர் அவர்களின் சொந்த ஊரான பன்னூரில் ஒரு தேவாலயத்தை கட்டியிருக்கிறார்கள்... அந்த ஆலயத்தைக்கட்ட சென்னை அடையாரில் உள்ள ஒரு சர்ச் தனது முழு பங்களிப்பை கொடுத்துள்ளது...அதாவது ஒரு ஆறு பாயில் உட்காரக்கூடிய ஜனத்தொகை உள்ள அந்த குக்கிராமத்தில்...ஆயிரம் பேர் உட்காரக்கூடிய அளவில் ஒரு சர்ச் கட்டியுள்ளனர்...இதுவும் அதே சி எஸ் ஐ சென்னைப்பேராயத்தின் ஓர் அங்கம்தான்... இதையும் பாருங்கள்....
 

இதே சென்னை பேராயத்தை சேர்ந்த ஒரு குருசேகரம் கடந்த 17 வருஷமா ஒரு தேவாலயம் இல்லாம இருக்கு... திருத்தணிக்கும் சோளிங்கருக்கும் நடுவுல இருக்குற ஆர்.கே.பேட்டை குருசேகரம்தான் அது....ஒருவேளை இந்த ஊர்ல இருந்து ஒரு பிஷப் வந்தாத்தான் சர்ச் கட்டுவாங்க போலிருக்கு....

இப்போ நான் என்னா சொல்ல வர்றேன்னா....

ஒவ்வொரு படத்தையும் கிளிக் பண்ணி பெருசா பாருங்க....உங்களால முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு தெரிஞ்ச கிருத்துவ நண்பர்களுக்கு இதை சொல்லுங்க...ஷேர் பண்ணுங்க...உங்க கமெண்ட்ட பதிவு பண்ணுங்க.... 

இதனோட முக்கியமான விஷயத்த அடுத்த பதிவுல சொல்லுறேன்....

6 comments:

சந்திரானந்தா சுவாமிகள் said...

அண்ணா கோயில் கட்டின நல்ல பைசா உண்டாகலாம் எல்லா மதத்துக்கும் இது பொருந்தும்...வர காணிக்கையை இவங்க இந்த மாதிரி மருத்துவத்திலும் கல்வியிலும் தான் செலவு செய்யணும் அதாவது முழு தொகை இல்லை ஒரு பங்கு செலவு பண்ணா போதும் ஆனா அது தான் இல்லையே அவிங்க வயித்த தான் வளக்கறாங்க...கோயிலெல்லாம் இப்போ கேடிகளின் கூடாரமாகவும் கேளிகையின் கொட்டடியாகவும் தான் இருக்கு அது தான் நெசம்

SURYAJEEVA said...

தேனெடுத்தவன் புறங்கைய நக்கலாம் என்று என் தந்தை சொல்வார்... எனக்கு அதிலும் உடன் பாடு இல்லை

சக்தி கல்வி மையம் said...

பள்ளி கற்றதுக்கு மட்டும் பணம் வருது, ஆனா மருத்துவ மனைக்கு ? எண்ணக கொடுமை சார்..


நானும் அந்த பள்ளியில் படித்த மாணவன்தான்..

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவமே அங்கேயும் அநியாயம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா அவ்வ்வ்வ்வ்!!!!!

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் உங்கள் கடமை உணர்வை மதிக்கின்றேன் .அத்துடன் அன்னையைத் தெய்வமாய் மதிக்கும் தங்கள் பண்புக்குத் தலை வணங்கி உங்கள் ஆக்கங்களைப் பின் தொடர்வதில்
பெருமைகொள்கின்றேன் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .தொடர்ந்தும் சிறப்பான ஆக்கங்களால் உங்கள் வலைத்தளம் சிறக்கட்டும் ...............

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வருமானத்தின் அளவை பார்க்கிறவர் அதன் தரத்தையும் அதன் தேவையையும் பார்ப்பதில்லை..


பள்ளிக்கும் தேவாலயத்திற்க்கும் காட்டும் அக்கறையை மருத்துவதுறைக்கும் காட்டினால் உண்மையில் நன்றாக இருக்கும் அப்போது கிறிஸ்துவம் போற்றப்படும்...

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்