நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Thursday 29 September, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எங்கள் ஊரின் (திருவள்ளூர்) பக்கத்தில் உள்ள வள்ளியூர் என்ற கிராமத்தில் இருக்கும் எங்கள் மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றான அரசினர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளியின் எதிரே சிறிய குடிசையில் உள்ள உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மிக வேகமாக வந்த மண் லாரி கட்டுப்பாட்டை இழந்து உள்ளே புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோத....அதுவே அவர்களின் கடைசி உணவாக ஆகிப்போனது.... சம்பவ இடத்தில் மூவரும், மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் ஒருவருமாக நான்கு வருங்காலத்தூண்களின் வாழ்கை முடிந்துபோனது... இன்னும் சிலபேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்...

                                        சம்பவத்திற்கு காரணமான அந்த லாரி...

அன்னையும் தந்தையும் தவமிருந்து பெற்ற பிள்ளைகள்... 
அசுர வேகத்தில் வந்த அரக்கனின் கையில் அரை நொடியில் அஸ்தமனமாகிப்போனார்கள்....அவர்களின் கனவுகளோடு....

ஒரு வருடமா??? இரண்டு வருடமா??? 
தன் மகனை பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்து சான்றோன் எனக்கேட்க காத்திருந்த தாயின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்...???
தன் தோளிலும் மார்பிலும் சுமந்த தந்தையின் மனம் எப்படி துடித்திருக்கும்...??
உடன் பிறந்த அண்ணன், தம்பி....அக்காள், தங்கை.... உறவுகள்....நண்பர்கள்..சுக்கு நூறாகிப்போயிருப்பார்கள்....

இறந்த மாணவர்களுக்கும் நமக்கும் எந்த சொந்தமுமில்லை....ஆனாலும் மனது கனத்துப்போகிறது...நெஞ்சம் பதறிப்போகிறது...

நெஞ்சு பொறுக்குதில்லையே...இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...



இதற்கு காரணம் யாரென்று கேட்டால்... லாரி டிரைவரோ அல்லது அதன் முதலாளியோ என்று சுலபமாக சொல்லிவிடலாம்....நன்றாக யோசித்துப்பார்த்தால்....இதற்கு காரணம் பொறுப்பற்ற அரசு அதிகாரிகள்தான் என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்....
இது எப்போதோ தடுக்கப்பட்டிருக்கவேண்டிய ஒன்று....எண்ணிலடங்கா மணல் லாரிகள்... தினமும் எண்ணற்ற தடவை லோடுகளை ஏற்றிசெல்கின்றன....அரசின் விதி அதிகாரிகளின் சதியினால் புதைந்துபோகிறது.... இதைக்குறித்து எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை.... திருவள்ளுரிலிருந்து மெய்யூர் செல்லும் சாலையைப்பார்த்தாலே தெளிவாக தெரிந்துவிடும்.... தார்பாய் மூடாமல் கரும்புகை கக்கிசெல்லும் லாரிகளும்... அவைகளால் நாசமாக்கப்பட்ட சாலைகளும்....உண்மையை எடுத்து சொல்லும்... மனசாட்சி உள்ள அதிகாரிகளும்...வயித்துக்கு சோத்த திங்கற அதிகாரிகளும் இருந்தா நேர்ல போய் பாருங்க....

         மெய்யூர்-திருவள்ளூர்-வள்ளியூர் சாலையில் தார்பாய் மூடாமல்       இன்னொரு எமன்... 

அனைத்து மட்டத்திலுள்ள அதிகாரிகளும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு ஆணியும் புடுங்கல... பெற்றோர்களின் ஒரு சொட்டு கண்ணீருக்கு உங்களால் ஆறுதலோ அல்லது நஷ்ட ஈடோ வழங்க முடியுமா...??? 

பள்ளியின் அருகே உள்ள சாலை மோசமாக இருக்கிறது...அங்கு பள்ளிக்கூடம் இருப்பதற்கான அறிவிப்பு பலகையும் கிடையாது... வேகத்தடையும் கிடையாது.... இதன் மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு மாணவர்களின் உயிர்தான் மனுவாகிப்போனதா???? 

                                            பள்ளியின் அருகே உள்ள சாலை...

ஹெலிகாப்டர்ல வர்ற முதல்வருக்கு அவர் பயணிக்காத சாலையையும் பழுது பாக்குறீங்களே....மத்தவங்க உயிர் என்ன உங்களுக்கு மயிரா??? 

உங்களுடைய அனுதாபங்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்....எதையும் தெரிவிக்காதீர்கள்.... தயவுசெய்து இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்க உங்கள் வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும்....

குறிப்பு: சென்ற சில மாதங்கள் வரை ஒரு குறுப்பிட்ட பாரத ஜாதிக்கட்சியின் சின்னத்தோடு பூந்தமல்லியாரின் பெயரோடு பல லாரிகள் ஓடிக்கொண்டிருந்தன....இப்போது ஆட்சி மாறிய பின் ஆளுங்கட்சியின் சின்னத்தோடு சிலபல லாரிகள் ஓடிக்கொண்டிருக்கிறது....சம்பந்தப்பட்டவர்கள் இப்போதே கவனித்தால் நல்லது....

வேண்டுகோள்: தயவுசெய்து யாராவது எங்கள் மாவட்ட ஆட்சியரை மாற்றி விடுங்கள்... அவர் இருப்பதும் ஒன்று,இல்லாமல் இருப்பதும் ஒன்று...இதற்கு முன் சுந்தரமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தார்....ஒரு நல்ல ஆட்சியர்...மீண்டும் வருவாரா???

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னை மனதளவில் மிகவும் பாதித்த சம்பவும்...

இராஜராஜேஸ்வரி said...

அன்னையும் தந்தையும் தவமிருந்து பெற்ற பிள்ளைகள்...
அசுர வேகத்தில் வந்த அரக்கனின் கையில் அரை நொடியில் அஸ்தமனமாகிப்போனார்கள்....அவர்களின் கனவுகளோடு..../

நெஞ்சு பொறுக்குதில்லையே...இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...

சக்தி கல்வி மையம் said...

மிகவும் வருத்தமான செய்தி நண்பா.. நானும் அதே பகுதியைச் சேர்ந்தவன் தான்..

இன்று காலையில்கூட சில லாரிகள் சவுடு ஏற்றிக்கொண்டு தான் செல்கிறது..

ராஜா MVS said...

வருத்தப் படுவதால் போன உயிர் திரும்பிடாது...
கோபப் படுவதால் எதுவும் மாறி விடாது...
மக்கள் ஒன்று திரண்டு அதற்கான முயற்சியில் இறங்கவேண்டும், இல்லையேல் மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்...

ராஜா MVS said...

பகிர்வுக்கு மிக்க நன்றி...நண்பரே...

இன்ட்லி, தமிழ்10 ஓட்டுபட்டை இணைக்கவில்லையே நண்பரே... இவைகளில் தங்களின் பதிவுக்கு எப்படி ஓட்டு போடுவது...

சிறு வேண்டுகோள்: கருத்துரை இடும்போது எழுத்து சரிபார்தல் வருகிறது அதை நீக்கி விட்டால் கருத்திட சற்று வசதியாக இருக்கு நண்பா...

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

N.H. Narasimma Prasad said...

இறந்த மாணவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்