நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Thursday 29 September, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...

எங்கள் ஊரின் (திருவள்ளூர்) பக்கத்தில் உள்ள வள்ளியூர் என்ற கிராமத்தில் இருக்கும் எங்கள் மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றான அரசினர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளியின் எதிரே சிறிய குடிசையில் உள்ள உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மிக வேகமாக வந்த மண் லாரி கட்டுப்பாட்டை இழந்து உள்ளே புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோத....அதுவே அவர்களின் கடைசி உணவாக ஆகிப்போனது.... சம்பவ இடத்தில் மூவரும், மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் ஒருவருமாக நான்கு வருங்காலத்தூண்களின் வாழ்கை முடிந்துபோனது... இன்னும் சிலபேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்...

                                        சம்பவத்திற்கு காரணமான அந்த லாரி...

அன்னையும் தந்தையும் தவமிருந்து பெற்ற பிள்ளைகள்... 
அசுர வேகத்தில் வந்த அரக்கனின் கையில் அரை நொடியில் அஸ்தமனமாகிப்போனார்கள்....அவர்களின் கனவுகளோடு....

ஒரு வருடமா??? இரண்டு வருடமா??? 
தன் மகனை பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்து சான்றோன் எனக்கேட்க காத்திருந்த தாயின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்...???
தன் தோளிலும் மார்பிலும் சுமந்த தந்தையின் மனம் எப்படி துடித்திருக்கும்...??
உடன் பிறந்த அண்ணன், தம்பி....அக்காள், தங்கை.... உறவுகள்....நண்பர்கள்..சுக்கு நூறாகிப்போயிருப்பார்கள்....

இறந்த மாணவர்களுக்கும் நமக்கும் எந்த சொந்தமுமில்லை....ஆனாலும் மனது கனத்துப்போகிறது...நெஞ்சம் பதறிப்போகிறது...

நெஞ்சு பொறுக்குதில்லையே...இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...



இதற்கு காரணம் யாரென்று கேட்டால்... லாரி டிரைவரோ அல்லது அதன் முதலாளியோ என்று சுலபமாக சொல்லிவிடலாம்....நன்றாக யோசித்துப்பார்த்தால்....இதற்கு காரணம் பொறுப்பற்ற அரசு அதிகாரிகள்தான் என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்....
இது எப்போதோ தடுக்கப்பட்டிருக்கவேண்டிய ஒன்று....எண்ணிலடங்கா மணல் லாரிகள்... தினமும் எண்ணற்ற தடவை லோடுகளை ஏற்றிசெல்கின்றன....அரசின் விதி அதிகாரிகளின் சதியினால் புதைந்துபோகிறது.... இதைக்குறித்து எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை.... திருவள்ளுரிலிருந்து மெய்யூர் செல்லும் சாலையைப்பார்த்தாலே தெளிவாக தெரிந்துவிடும்.... தார்பாய் மூடாமல் கரும்புகை கக்கிசெல்லும் லாரிகளும்... அவைகளால் நாசமாக்கப்பட்ட சாலைகளும்....உண்மையை எடுத்து சொல்லும்... மனசாட்சி உள்ள அதிகாரிகளும்...வயித்துக்கு சோத்த திங்கற அதிகாரிகளும் இருந்தா நேர்ல போய் பாருங்க....

         மெய்யூர்-திருவள்ளூர்-வள்ளியூர் சாலையில் தார்பாய் மூடாமல்       இன்னொரு எமன்... 

அனைத்து மட்டத்திலுள்ள அதிகாரிகளும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு ஆணியும் புடுங்கல... பெற்றோர்களின் ஒரு சொட்டு கண்ணீருக்கு உங்களால் ஆறுதலோ அல்லது நஷ்ட ஈடோ வழங்க முடியுமா...??? 

பள்ளியின் அருகே உள்ள சாலை மோசமாக இருக்கிறது...அங்கு பள்ளிக்கூடம் இருப்பதற்கான அறிவிப்பு பலகையும் கிடையாது... வேகத்தடையும் கிடையாது.... இதன் மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு மாணவர்களின் உயிர்தான் மனுவாகிப்போனதா???? 

                                            பள்ளியின் அருகே உள்ள சாலை...

ஹெலிகாப்டர்ல வர்ற முதல்வருக்கு அவர் பயணிக்காத சாலையையும் பழுது பாக்குறீங்களே....மத்தவங்க உயிர் என்ன உங்களுக்கு மயிரா??? 

உங்களுடைய அனுதாபங்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்....எதையும் தெரிவிக்காதீர்கள்.... தயவுசெய்து இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்க உங்கள் வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும்....

குறிப்பு: சென்ற சில மாதங்கள் வரை ஒரு குறுப்பிட்ட பாரத ஜாதிக்கட்சியின் சின்னத்தோடு பூந்தமல்லியாரின் பெயரோடு பல லாரிகள் ஓடிக்கொண்டிருந்தன....இப்போது ஆட்சி மாறிய பின் ஆளுங்கட்சியின் சின்னத்தோடு சிலபல லாரிகள் ஓடிக்கொண்டிருக்கிறது....சம்பந்தப்பட்டவர்கள் இப்போதே கவனித்தால் நல்லது....

வேண்டுகோள்: தயவுசெய்து யாராவது எங்கள் மாவட்ட ஆட்சியரை மாற்றி விடுங்கள்... அவர் இருப்பதும் ஒன்று,இல்லாமல் இருப்பதும் ஒன்று...இதற்கு முன் சுந்தரமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தார்....ஒரு நல்ல ஆட்சியர்...மீண்டும் வருவாரா???

Monday 26 September, 2011

சபாஷ் ......சரியான போட்டி....


இந்த சூழ்நிலை உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமில்லாமல்.....சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஏற்படவேண்டும்....
ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக களம் இறங்குவதை பார்க்கும் போது உள்ளாட்சிகளில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.... நேரத்திற்கு ஏற்றாற்போல் கூட்டணிகளை மாற்றிக்கொள்கின்ற கட்சிகளுக்கு செம அடி....

திமுகவில் இப்போதே பாட ஆரம்பித்துவிட்டார்கள்.....தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறதென்று,....இதுல ஸ்டாலின் வேற...மறுபடியும் சென்னை மேயரா இப்ப இருப்பவரே வருவாருன்னு ஜம்பமா சொல்லுறாரு....எப்படித்தான் உங்களால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுதோ....
(தோத்தபிறகு சப்பைக்கட்டு கட்டலாம் அதுக்குத்தான்...)

அதிமுக முழு நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.... ஆனாலும் ஓவர் கான்பிடன்ஸ் ஒடம்புக்கு ஆகுமான்னு தெரியல.... பெரும்பாலான இடங்கள் இவர்களின் வசம்தான் வரும் என்பதில் சந்தேகமில்லை....சுயநலமாக இருந்தாலும், ஒட்டுண்ணி கட்சிகளுக்கும், ஜாதி கட்சிகளுக்கும் ஆப்பு வைத்த அம்மா ராக்ஸ்.....

காங்கிரசில் ஒரே தமாசுதான் போங்க.... பதிமூணு தலைவருங்க சேர்ந்து...!!??? வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க போறாங்களாம்....ரொம்ப கஷ்டம்ன்னு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு பேட்டியில சொல்லிட்டு சிரிக்கிறார்....அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்.....
யாருமே இல்லாத கட்சிக்கு தலைவருங்க மட்டும் பதிமூனுபேரு....

திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி தேமுதிக முழிபிதுங்கி நிக்குது....சட்டமன்ற தேர்தல்ல கப்பல்ல புட்போர்டு அடிச்ச கேப்டன், உள்ளாட்சி தேர்தல்ல தண்ணியில தள்ளிவிடப்பட்டுள்ளார்....கரைசேருவாரா...???கஷ்டம்தான்....."சட்டி சுட்டதடா...புட்டி நிக்குதடான்னு.....ஊறுகாயோட ஒதுங்கிட்டாருன்னு கேள்வி....

காம்ரேட்டுகள்....தோள்ள துண்டு போட்ட தோழர்களெல்லாம்....துண்ட எடுத்து...கைய உள்ள வச்சு மறச்சு பேரம் படியுதான்னு படிப்படியா ஏறி இறங்கினு இருக்காங்க....அருவாள வச்சு எந்த கதிர அறுக்கபோறாங்கன்னு தெரியல.....

இந்தா பாருயா நம்ம ஆளுங்க....பழசாகிப்போன புதிய தமிழகம்....விடுதலையாகிப்போன சிறுத்தைகள்....புரட்சி செய்யாத பாரதம்....எல்லாம் தனித்தனியா.... அடப்பாவமே....என்னய்யா ஆச்சு....எல்லாரும் தலைமேல துண்டு போட்டுக்குனு.... நீங்கெல்லாம் மொதல்ல போய் காக்கா கூட்டத்த பாத்துட்டு வாங்க....காக்கா புடிக்கிறத வுட்டுட்டு ஒத்துமையா இருக்க கத்துக்கோங்க.....

சே....என்ன உலகம்யா இது....ஏதாவது குட்டைய குழப்பி....கலவரம்பன்னி....காடுவெட்டி...ஜெயிக்கலாம்ன்னு பாத்தா....எதுக்குமே வழியில்லையே....பேசாம புள்ளயமட்டும் அமைச்சராக்கிட்டு நாம வீட்டுலேயே இருந்திருக்கலாமோ....தைலம் பூசிக்கிட்டே... தோட்டத்துல யோசிக்கிறாராம்....ஸ்டெத்துக்காரர்....

யாராவது எப்படியாவது போங்க....சட்டமன்றத்துக்கே மட்டம்போட்டுட்டேன்....இதுக்கா வரப்போறேன்....நான் போயி தூக்கு தண்டனைய நிறுத்தனும்....இலங்கை விவகாரத்த பாக்கணும்....உலக லெவெல்ல பிசியா இருக்குற என்னப்போயி....தொந்தரவு செய்றீங்களேன்னு வாய்க்கா வரப்புல நின்னுக்குனு ஒருத்தரு சொல்லுறாரு....

வாங்க வாங்க.... உங்களுக்காகத்தான் காத்துக்குனு இருக்கேன்னு... சும்மா ஹாயா கால்மேல கால் போட்டு உக்காந்துக்குனு இருக்கு தேர்தல் ஆணையம்....

அதுசரி.....உங்களுக்கெல்லாம் என்ன வேணும்????? நீங்கெல்லாம் யாரு....???? இந்த கேள்வியோட....சில இடத்துல ஆரத்தியும், பல இடத்துல செருப்பையும் வச்சிக்கிட்டு வெயிட் பண்றாங்களாம் நம்ம மக்கள்.....பாத்து போங்கப்பா.....

இந்த மொக்கசாமி சொல்லவேண்டியத சொல்லிட்டேன்.....அப்புறம் உங்க இஷ்டம்....

========================================================================


Tuesday 20 September, 2011

அணு உலையா??? அணு ஊளையா????


திரு ரவி அவர்களால் வெளியிடப்பட்டது....

கூடங்குளம் வரமா, சாபமா என்ற ஒரு கேள்வி என்னை கேட்டால் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று கேள்விக்கு என்று அறிவூப்பூர்வமாக பதில் கிடைக்குமோ அன்றுதான் இந்த விடயத்திர்க்கும் பதில் கிடைக்கும்.நான் இந்த கட்டுரை எழுத காரணமே இந்த முகநூலில் பல பேர் பலவிதமாக ஸ்டேட்டஸ் போட்டு பதிலை எதிர்பார்த்து அதுக்கு அரசியல் சாயம் பூசி உள்ளது மிகவும் வேதனையே.... நானும் முடிந்த வரை என் அறிவுக்கு எட்டிய வரை தெளிவுபடுத்த முயன்றேன் ஆனாலும் சில பேர் அதை புரிந்து கொள்ளவோ அல்லது அதை பற்றி ஆக்கபூர்வமாக விவாதிக்கவோ தயாரில்லை, மாறாக ஒருவர் கேட்டார் சினிமாவை தொழிலாக கொண்டுள்ள உங்களுக்கு என்ன தெரியும் என்று, அந்த மாதிரி கேள்வி கேட்கும் அன்பு நண்பர்களுக்கு நான் இங்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

நான் ஒரு எலக்ட்ரானிக் பொறியாளர், 2001லேயே சிங்கப்பூரில் உள்ள எகனாமிக் டெவலப்மென்ட் போர்ட் ஆப் சிங்கப்பூர் (EDB) எனும் அரசு சார்ந்த நிறுவனம் கே நாலேட்ஜ்(K-Economy) எனப்படும் ஆட்களை உலகத்தில் எங்கு இருந்தாலும் அவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு சிங்கப்பூர் ரெசிடன்ட் எனும் அந்தஸ்து, இன்குபேட்டர் எனும் கண்டுபிடிப்புக்கான ஒரு ஆராய்ச்சி கூடம் உள்ள ஒரு அலுவுலகம் சயின்ஸ் பார்க்கில், அந்த புது கண்டுபிடிப்புக்கு தேவையான கேபிடல் (Capital) எனும் முதல், மற்றும் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக சிங்கப்பூர் அரசே பங்கு கொள்ளும், அதை பெற்ற பாக்கியவன் நானும் ஒருவன். இது மட்டுமல்ல அதற்க்கு பிறகு மம்பு (MAMPU)எனப்படும் மலேசிய பிரதமர் அலுவலகத்தில் ஒன்னரை வருடம், மலேசியன் ஸ்பேஸ் ரிசர்ச் (MEASAT)எனப்படும் வின்வெளி ஆராய்ச்சியில் 2006 வரை பணி புரிந்து அதற்க்காக ஒன்பது மாதங்கள் போயிங் (Boeing Aero Space - Los Angeles) மற்றும் பதிமூனு மாதம் (NASA) நாசா வில் ஆராய்ச்சி மேலாளாராக என்னை அனுப்பி வைத்தனர். அப்புறம் தான் இந்த நான்கு வருட சினிமா சகவாசம். நான் இதை பெருமைக்காக பகிரவில்லை நாசா என்று நான்கெழுத்து மேஜிக் உலகில உள்ள அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று, ஆனால் திருநெல்வேலியில் சரியாக ஒரு கார் கூட செல்ல முடியாத ஒரு தெருவில் பிறந்த எனக்கு என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு செயல், அந்த இரண்டு வருட ஆராய்ச்சியில் தான் இந்த அனு உலை மற்றும் அதின் லாப நஷ்டங்களை தெரிந்து கொண்டேன்.

அனு உலை நமக்கு வேனுமானால் இது புது விஷயம் ஆனால் 1942 தான் அனு உலை பிறந்த வருடம். சுமார் 69 வருடத்திற்க்கு பிறகு இதை பற்றி இவ்வளவு அளவுக்கு விவாதிக்கும் சூழ் நிலை அனு உலையின் மீது உள்ள பிரச்சினை அல்ல, இயற்க்கை பேரழிவின் போது அனு உலையின் பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது என்பது தான் கவலையே...... அனு உலையய் முதன் முதலாக 1942 ஆம் ஆண்டு ரிக்கர்டோ ஹுசாடா என்ற ரஷிய விஞ்சானி தான் முதன் முதலாக கண்டு பிடித்தார், அது மட்டுமில்லாமல் 1954 ஆம் ஆண்டு முதன் அனு உலை கட்டபட்டு மின்சாரம் தயாரித்தார்கள். ஒரு நல்ல விஷயம் எவ்வளவு நாள் ஆனாலும் அது கடைசியில் நம் வாழ்வின் அங்கமாகிவிடும், ஆனால் சில கெட்ட விடயம் எவ்வளவு முயன்றாலும் அது காலத்திர்க்கு நிலைக்காது, அது போல இந்த அனு உலை என்பது உலக அளவில் ஒரு இன்றி அமையாத ஒரு அங்கமாகிவிட்டது. இன்று உலக அளவில் 21% சதவிகித ATOMIC மின்சாரம் உற்பத்தி உள்ளது இதில் 50% சதவிகிதம் அமெரிக்கா, பிரான்ஸ்,ஜப்பான் நாடுகளின் உற்பத்தி ஆகும். மீதமுள்ள 38 நாடுகள் 50% சதவிகிதம் மின்சாரம் தயாரிக்கிறது. உலகம் முழுவதும் மொத்தம் 433 அனு உலைகள் இருபத்தினான்கு நேரமும் கொஞ்சம் கூட மாசு ஏற்ப்படாமல் தன் பனியய் சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் இது வரை ஆறு முறை தான் விபத்து என்று பார்த்தால், அதிலும் நான்கு முறை பூகம்பத்தினால் என்ற உண்மை யாருக்கு தெரியும்.


அனு உலை என்றால் என்ன - உலகில் எல்ல விஷயங்களுக்கும் தேவை சக்தி எனப்படும் ஒரு எனர்ஜி பேக்டர், நம் உடம்புக்கு தேவை சாப்பாடு எனப்படும் சக்தி, அது போல கார்களுக்கு தேவை பெட்ரோல், டீசல் எனப்படும் எரி சக்தி. எரி சக்தி இப்பொழுது எட்டா கனியாகி போய் விட்டது நிறைய நாட்டில், ஏன் இந்தியாவில் கூட அதனால் தான் நாம் நாட்டின் வருமானத்தை எல்லாம் கச்சா இறக்குமதி எனப்படும் அரக்கனுக்காக நாம் லட்சம் கோடியில் வருடா வருடம் போட்டி போட்டு செழவழித்து கொண்டு இருக்கிறோம். மாற்று எரிபொருள் இந்த 200 வருடங்களாகவே அது ஒரு ஆராய்ச்சி பொருளாகவே வலம் வருகின்றன காரணம் உள்ளூர் மற்றும் உலக அளவில் ஆயில் மாபியாக்கள் ஆதிக்கம். இந்த சூழ் நிலையில் சோலார் எனர்ஜி,காற்றாலை எனர்ஜி,ஹயட்ரோ எனர்ஜி,பயோ எனர்ஜி எல்லாமே ஒரு வருடத்தில் 3% தேவையய் தான் நம்க்கு ஈடு கட்டுகிறது. நமக்கு எனர்ஜி என்றால் இப்பொழுது கிடைக்கும் அனல் மின்சாரம் தான் ஆம் கச்சா எண்ணய் மாதிரியே கருப்பு தங்கம் என கூறும் நிலக்கரியின் வழிதாரத்தை கொண்டு நமக்கு மின்சார தேவையை அறை குறையாக நிறைவேற்ற படுகிறது. ஆனால் அந்த கருப்பு தங்கமாகிய நிலக்கரியும் இன்டோனேஷியா மற்றும் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டாலும் அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உப்புமா போன்ற ஒரு ஆபத்பாந்தவன் தான் முழுமையான சொலுயுஷன் இல்லை ஏன் என்றால் கரியை தொட்டாலே கருப்பாகும் நம் கைகள் அதை இருபத்தினான்கு நேரமும் எரித்து அதன் மூலம் கிடைக்கும் எனர்ஜி எவ்வளவு அசுத்தம் என சொல்லி தெரியவேண்டாம். இந்த அனு உலை உன்மையாகவே ஒரு வர பிரசாதம். ஒரு சின்ன உதாரனம் மூனு லட்சம் (3 lakhs Kgs) கிலோ நிலக்கரி செய்யும் ஒரு வேலையை சுமார் அருபத்தி ஐந்து கிராம் (65 gms) செறிவுட்ட பட்ட ஒரு அனு சுமார் இருபது வருடங்கள் பலன் தரும் என்று எவ்வளவு பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது. அதற்க்காக அதன் தாக்கம், அதன் ரிஸ்க் பேக்ட்ரை நான் உங்களுக்கு தெரிவிக்காமல் இருக்க போவதில்லை. சமையல் எரிவாயு சிலின்டரை எவ்வளவு பயமாக் பார்க்கும் நாம் அதை வீட்டின் சமையல் அறையில் வைத்து நாம் பக்குவமாக பயன்படுத்துவதில்லயா, அல்லது நூற்பது அடி மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே கிலி ஏற்ப்படும் நாம் சுமார் 45,000 அடி உயரத்தில் கன்டம் விட்டு கன்டம் பறக்கிறோமே அந்த விமானம் ஏறும் வரை தான் நம் கையில் இறங்கிய பிறகு தான் நிஜம் எனும் மன பக்குவத்திர்க்கு வந்த நாம் ஏன் இன்னும் அனு உலையய் எமனாக பார்ப்பது எந்த விஷயத்தில் சரியானது.....இனிமேல் ஆக்கபூர்வ தகவல்களுடன்...... Nag Ravi - 19th September 2011.

இந்த கட்டுரை இன்னும் மூனு பாகங்களாய் அனைத்து உண்மைகளூடம் படங்கள் மற்றும் ஆதாராத்தோடு எழுதிகிறேன் அதே சமயம் அதன் ஆப்டர் எபக்ட்களை பற்றியும் கண்டிப்பாக கூறுகிறேன். தயவு கொண்டு இதை முடிந்தால் உங்கள் பக்கங்களில் பிரசரியுங்கள் உங்களுடைய கமென்டுக்கள் கண்டிப்பாக எழுதி என்னை ஊக்க படுத்துங்கள், அரசியல் சாயம் பூசாதீர்கள் பீளிஸ்

I can answer to every meaningful question or doubt on this subject........

மேலும் விவரங்களுக்கு....http://tinyurl.com/6h5waj2


Thursday 15 September, 2011

தமிழக முதல்வர் அவர்களுக்கு மிகவும் நன்றி.....


அதாவது எதுக்கு இந்த நன்றின்னு நீங்க கேக்கலாம்.....

* உங்களுடைய சிறப்புதிட்ட செயலாக்கத்துறை மூலம் நீங்கள் கொடுக்கவிருக்கும் 

இலவச மின்விசிறிக்காகவோ....

இலவச மிக்சிக்காகவோ....

இலவச கிரைண்டருக்காகவோ....

இலவச ஆடு மாடுகளுக்காகவோ.... அல்லது 

இலவச மடிக்கணினிக்காகவோ... 
நன்றிகளை நாங்கள் ஏறெடுக்கவில்லை..... 

இந்த திட்டங்களை முதன் முதலாக செயல்படுத்த எங்களுடைய திருவள்ளூர் மாவட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்திற்காகவும்....

அதற்கான விழாத்திடலை மாவட்ட தலைநகருக்கு அருகிலேயே அமைத்ததற்காகவும்....முதற்கண் தெரிவித்துக்கொள்கிறோம்....

இதனால் நாங்கள் அடைந்த பயன்.... (சில இடங்களில் மட்டும் )
                              திடீர் குப்பைதொட்டி...திடீர் சாலை தடுப்பு....அடாடா என்ன ஒரு வேகம்....

சாலைகள் அசுர கதியில் செப்பனிடப்பட்டன....

மேடு பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன....

குப்பைகள் அகற்றப்பட்டன....

ஒருசில இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் காணாமல் போயின....

திடீரென சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன.....

அதிகாரிகளைப்போல் திடீரென சிக்னல்கள் செயல்படுகின்றன...
                                            திருவள்ளூர் மாவட்ட தாலுக்கா அலுவலகத்தின் முன்.....

சாலை ஓரங்களில் (தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாமல்) கிருமி நாசினி தெளிக்கப்பட்டன....

இவை அனைத்தும், நீங்கள் வருகிறீர்கள் என்ற ஒரே காரணத்தினால் செய்யப்படுகின்றன....

(இவர்களெல்லாம் இத்தனை நாள் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை)

இப்போது புரிகிறதா....எங்களுடைய தேவை நீங்கள் கொடுக்கும் இலவசங்கள் அல்ல....ஒருவேளை இந்த இலவச பொருட்களை நாங்கள் வாங்கினாலும் அதை உபயோகப்படுத்த எங்களால் முடியப்போவதில்லை...ஏனென்றால் கடந்த காலங்களில் உங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டு இப்போதும் அதைவிட அதிகமாக எங்கள் பகுதியில் தொடர்வதால்... 

எது எப்படியோ....

நீங்கள் வரப்போவதோ உலங்கு வானூர்தியில்(ஹெலிகாப்ட்டர்).... ஆனாலும் இவைகளெல்லாம் சாலையில் நடப்பதை பார்த்தால்.... "சட்டென்று மாறுது வானிலை" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது...ஒருவேளை நீங்கள் சாலையில் பயணித்து வந்தால் எங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.... விசுவாசமுள்ள அதிகாரிகள்.... நன்றி மேடம்.....

கடைசியாக ஒரு வேண்டுகோள்....
இனி ஒருமுறை நீங்கள் எங்கள் மாவட்டத்திற்கு வருவீர்களா என்று தெரியாது..... ஆனாலும் தயவுசெய்து ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடுங்கள்....வரப்போகிறேனென்று.... விழித்துக்கொள்ளட்டும் அதிகாரிகள்....இப்போதும் "ஒரு பொய்யாவது சொல் கண்ணே" என்ற பாடல் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை....

அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பு....

என்றோ ஒருநாள் மட்டும் வந்துபோகும், மக்களால் மக்களுக்காக சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மான்புமிகுகளுக்காக வேலை செய்யும் அதிகாரிகளே....
         இது இந்த சாலையின் இன்றைய நிலை மட்டுமல்ல....கடந்த மூன்று வருடங்களாக இதேநிலைதான்....

இன்னும் எங்களின் தெருக்களில் சாலைகளும், குப்பைகளும், எரியாத தெரு விளக்குகளும் இன்னபிற தேவைகளும் அப்படியேதான் இருக்கின்றன.... முதலமைச்சர் எங்கள் தெருக்களுக்கு வரப்போவதில்லை என்ற அலட்சியம்தானே..... மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு .....மான்புமிகுகளுக்கான வசதிகளை செய்வது...பெற்ற தாயை கூட்டிக்கொடுப்பதற்கு சமம்.....
                                 சென்ற மாதம் போடப்பட்ட தார் சாலை...தாரும் காணோம்... சாலையும் காணோம்...
அவசர அவசரமாக போடப்பட்ட சாலைகள் எத்தனை நாளைக்கு வருமென்று தெரியாது.... இதைக்குறித்து எத்தனையோமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனுக்களையும் மெயில்களையும் மனு கோரிக்கை எண் (RT/11/07167 http://tiruvallurgdp.tn.nic.in/online/ ) அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதவர்கள்....இப்போது ஆடுவதும்.... ஓடுவதும்.... விபச்சாரம் செய்வதை விட கேவலமாக இருக்கிறது.....
                                                          மூன்று வருடங்களுக்கு மேல் இதே நிலை...

Note....:-படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்....

அரசியல்வாதிகளே....உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.... நீங்கள் வந்து செல்வதற்காவது நல்ல சாலைகளை அமைத்துக்கொள்ளுங்கள்..... ஏனென்றால் பாவம், மக்களுக்காக கஷ்டப்படுகின்ற நீங்கள் கஷ்டப்படாமல் வந்துசெல்ல வேண்டுமல்லவா....

ஊரெல்லாம் கட்சி கொடி பறக்கிறது.... பத்து கொடிக்கு நடுவில் ஒரு செடி நட்டால் கூட....ஊரே பசுமையாக மாறிவிடும்....அனைத்து கட்சி தலைவர்களும் உங்க தொண்டர்களுக்கு சொல்லுங்கையா....

அடுத்த தேர்தலில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ, கட்டிலெல்லாம் தர்றதா பிரச்சாரம் பண்றாமாதிரி கனவு வருது.... மெய்யாலுமா?????? 

மானங்கெட்டவர்கள்....மனந்திருந்துவார்களா.....???????

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்