நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Thursday 15 September, 2011

தமிழக முதல்வர் அவர்களுக்கு மிகவும் நன்றி.....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அதாவது எதுக்கு இந்த நன்றின்னு நீங்க கேக்கலாம்.....

* உங்களுடைய சிறப்புதிட்ட செயலாக்கத்துறை மூலம் நீங்கள் கொடுக்கவிருக்கும் 

இலவச மின்விசிறிக்காகவோ....

இலவச மிக்சிக்காகவோ....

இலவச கிரைண்டருக்காகவோ....

இலவச ஆடு மாடுகளுக்காகவோ.... அல்லது 

இலவச மடிக்கணினிக்காகவோ... 
நன்றிகளை நாங்கள் ஏறெடுக்கவில்லை..... 

இந்த திட்டங்களை முதன் முதலாக செயல்படுத்த எங்களுடைய திருவள்ளூர் மாவட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்திற்காகவும்....

அதற்கான விழாத்திடலை மாவட்ட தலைநகருக்கு அருகிலேயே அமைத்ததற்காகவும்....முதற்கண் தெரிவித்துக்கொள்கிறோம்....

இதனால் நாங்கள் அடைந்த பயன்.... (சில இடங்களில் மட்டும் )
                              திடீர் குப்பைதொட்டி...திடீர் சாலை தடுப்பு....அடாடா என்ன ஒரு வேகம்....

சாலைகள் அசுர கதியில் செப்பனிடப்பட்டன....

மேடு பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன....

குப்பைகள் அகற்றப்பட்டன....

ஒருசில இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் காணாமல் போயின....

திடீரென சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன.....

அதிகாரிகளைப்போல் திடீரென சிக்னல்கள் செயல்படுகின்றன...
                                            திருவள்ளூர் மாவட்ட தாலுக்கா அலுவலகத்தின் முன்.....

சாலை ஓரங்களில் (தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாமல்) கிருமி நாசினி தெளிக்கப்பட்டன....

இவை அனைத்தும், நீங்கள் வருகிறீர்கள் என்ற ஒரே காரணத்தினால் செய்யப்படுகின்றன....

(இவர்களெல்லாம் இத்தனை நாள் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை)

இப்போது புரிகிறதா....எங்களுடைய தேவை நீங்கள் கொடுக்கும் இலவசங்கள் அல்ல....ஒருவேளை இந்த இலவச பொருட்களை நாங்கள் வாங்கினாலும் அதை உபயோகப்படுத்த எங்களால் முடியப்போவதில்லை...ஏனென்றால் கடந்த காலங்களில் உங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டு இப்போதும் அதைவிட அதிகமாக எங்கள் பகுதியில் தொடர்வதால்... 

எது எப்படியோ....

நீங்கள் வரப்போவதோ உலங்கு வானூர்தியில்(ஹெலிகாப்ட்டர்).... ஆனாலும் இவைகளெல்லாம் சாலையில் நடப்பதை பார்த்தால்.... "சட்டென்று மாறுது வானிலை" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது...ஒருவேளை நீங்கள் சாலையில் பயணித்து வந்தால் எங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.... விசுவாசமுள்ள அதிகாரிகள்.... நன்றி மேடம்.....

கடைசியாக ஒரு வேண்டுகோள்....
இனி ஒருமுறை நீங்கள் எங்கள் மாவட்டத்திற்கு வருவீர்களா என்று தெரியாது..... ஆனாலும் தயவுசெய்து ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடுங்கள்....வரப்போகிறேனென்று.... விழித்துக்கொள்ளட்டும் அதிகாரிகள்....இப்போதும் "ஒரு பொய்யாவது சொல் கண்ணே" என்ற பாடல் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை....

அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பு....

என்றோ ஒருநாள் மட்டும் வந்துபோகும், மக்களால் மக்களுக்காக சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மான்புமிகுகளுக்காக வேலை செய்யும் அதிகாரிகளே....
         இது இந்த சாலையின் இன்றைய நிலை மட்டுமல்ல....கடந்த மூன்று வருடங்களாக இதேநிலைதான்....

இன்னும் எங்களின் தெருக்களில் சாலைகளும், குப்பைகளும், எரியாத தெரு விளக்குகளும் இன்னபிற தேவைகளும் அப்படியேதான் இருக்கின்றன.... முதலமைச்சர் எங்கள் தெருக்களுக்கு வரப்போவதில்லை என்ற அலட்சியம்தானே..... மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு .....மான்புமிகுகளுக்கான வசதிகளை செய்வது...பெற்ற தாயை கூட்டிக்கொடுப்பதற்கு சமம்.....
                                 சென்ற மாதம் போடப்பட்ட தார் சாலை...தாரும் காணோம்... சாலையும் காணோம்...
அவசர அவசரமாக போடப்பட்ட சாலைகள் எத்தனை நாளைக்கு வருமென்று தெரியாது.... இதைக்குறித்து எத்தனையோமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனுக்களையும் மெயில்களையும் மனு கோரிக்கை எண் (RT/11/07167 http://tiruvallurgdp.tn.nic.in/online/ ) அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதவர்கள்....இப்போது ஆடுவதும்.... ஓடுவதும்.... விபச்சாரம் செய்வதை விட கேவலமாக இருக்கிறது.....
                                                          மூன்று வருடங்களுக்கு மேல் இதே நிலை...

Note....:-படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்....

அரசியல்வாதிகளே....உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.... நீங்கள் வந்து செல்வதற்காவது நல்ல சாலைகளை அமைத்துக்கொள்ளுங்கள்..... ஏனென்றால் பாவம், மக்களுக்காக கஷ்டப்படுகின்ற நீங்கள் கஷ்டப்படாமல் வந்துசெல்ல வேண்டுமல்லவா....

ஊரெல்லாம் கட்சி கொடி பறக்கிறது.... பத்து கொடிக்கு நடுவில் ஒரு செடி நட்டால் கூட....ஊரே பசுமையாக மாறிவிடும்....அனைத்து கட்சி தலைவர்களும் உங்க தொண்டர்களுக்கு சொல்லுங்கையா....

அடுத்த தேர்தலில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ, கட்டிலெல்லாம் தர்றதா பிரச்சாரம் பண்றாமாதிரி கனவு வருது.... மெய்யாலுமா?????? 

மானங்கெட்டவர்கள்....மனந்திருந்துவார்களா.....???????

1 comment:

சந்திரானந்தா சுவாமிகள் said...

என்னத்த காரி துப்பினாலும் திருந்த மாட்டனுங்க இவனுங்க.. நக்சல மாறினா தான் தெரியும்....

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்