நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Monday 3 October, 2011

படிச்சவன் பாடம் நடத்துறான்..... படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாத்தியார் புள்ள மக்கு.....

போலிஸ்காரன் புள்ள திருடன்....

டாக்குட்டரு புள்ள சீக்காளி....

இவையெல்லாம் விளையாட்டாக கிராமப்புறங்களில் சொல்லப்படுபவை....

இன்றைய நிலைமை....இதைவிட படு மோசமாக இருக்கிறது....

புதுச்சேரியின் மைந்தர்களுக்கெல்லாம் கல்வி புகட்டக்கூடிய பொறுப்பு கல்வி அமைச்சராக உள்ளவர் கையில்தான் உள்ளது....அவருடைய கல்வித்தகுதிதான் இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது....


கல்வி அமைச்சராக ஆனபிறகு இவர் இப்போதுதான் தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதப் போகிறார்....
தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியலிலும், சமூக அறிவியலிலும் கோட்டை விட்ட இவர் இப்போது கோட்டைக்கு அமைச்சராக வந்திருக்கிறார்....

தமிழில் 48 மதிப்பெண்களும்....
ஆங்கிலத்தில் 47 மதிப்பெண்களும்...
கணக்கில் 75 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்...( பின்ன...அரசியல்ல நிறைய கணக்கு பண்ணனுமில்ல....). இப்போது அறிவியல் தேர்வை மட்டும் எழுதியுள்ளார்...இதில் 60 மதிப்பெண் வருமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்....(ஏம்பா...கல்வி அமைச்சருக்கு காட்டிட்டுத்தானே கேள்வித்தாளை வெளியிட்டீங்க???) டவுட்டு....!!!! 

இந்த முறை சமூக அறிவியல் எழுத முடியாம போயிருச்சி....(எதோ ஒரு வேலை விஷயமா போய்ட்டதால...)

பத்தாவது போனா என்ன???? இப்போது திறந்தவெளி தொலைதூரக்கல்வி மூலமாக (ஏற்கெனவே கல்வி தொலை தூரம்தான்) சென்னை பல்கழகத்தில் இளங்கலை (வரலாறு)  சேர்ந்துள்ளார்....(2011 - 2012 ). 

இதற்கு அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் என்னவென்றால்....
"எத்தனையோ பேர் என்னை டிகிரிய காசு குடுத்து வாங்க சொன்னாங்க...ஆனா நான்தான் நேர்வழியில டிகிரிய வாங்கனும்ன்னு சொல்லி இப்ப சென்னையில சேர்ந்தேன்...."

இப்ப என்னோட கேள்வி என்னான்னா??????????????

காசு குடுத்து டிகிரிய வாங்க சொன்னது எத்தனைபேர்....???

யார் யார்????

அப்போ படிக்காம, காசு குடுத்தா டிகிரி கிடைக்குதுன்னு நீங்களே ஒத்துக்குறீங்களா????

அப்படி உங்ககிட்ட சொன்னவங்களை என்ன பண்ணீங்க....?????
அதாவது அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க?????

இந்தமாதிரி குறுக்கு வழிய சொல்லிகுடுக்குறவங்கதான் உங்க கூட நெருக்கமா இருக்குறாங்களா???

திருட்டு சான்றிதழ் வழங்கும் கும்பல் எதையாவது கைதுசெய்தீர்களா????

எதுக்கு கேக்குறேன்னா....எனக்கு ஒரு சர்டிபிகேட் தேவைப்படுது.....அதனாலதான்.....அவ்வவ்வ்வ்வ் ......

இங்க நம்மளோட மத்த அமைச்சருங்கள பாருங்க....

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்....ஆரோக்கியசாமி....



நிதி அமைச்சர்... அண்ணன் கோடீஸ்வரன்....

                                               

போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் நட.. ராஜன்.....


கால்நடை மற்றும் விவசாயத்துறை அமைச்சர்....அண்ணன் மண்ணாங்கட்டி...



கதர் மற்றும் கைத்தறி துறை அமைச்சர்....அண்ணன் அம்மனாண்டி.....


பாதுகாப்பு மற்றும் காவல்துறை அமைச்சர்...அண்ணன் கபாலி....


இவங்கெல்லாம் ஒரு சாம்பிள்தான்.... நிஜத்துல நிறைய பேரு இருக்காங்க...இவங்களுக்கெல்லாம் கல்வித்தகுதிய கட்டாயமாக்கணும்.அதுமட்டுமில்லாம....எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வச்சுதான் தேர்ந்தெடுக்கணும்...ஏன்னா இன்னிக்கி இருக்கிற நிலமையில ஒரு சாதாரண குடிமகனுக்கு எந்த கட்சியிலேயும் சீட் குடுக்குறதில்ல....அவங்களோட பணபலம்... ஜாதி ஓட்டு...ஆள் பலம்...இதெல்லாம் வச்சிதான் சீட் குடுக்குறாங்க...
இன்னிக்கு இந்தியாவுல இன்னொரு காந்தி ஏன் உருவாகவில்லை....???
பின்ன என்னங்க??? ஊர் புல்லா கோட்சேவா இருந்தா அவருமட்டும் எப்படி வெளியே வருவாரு....க்கும்...

இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமுங்களா?????
வேற யாருமில்ல....நீங்களும் நானும்தான்....அதாவது பொதுமக்கள்தான்....
இன்னும் ஐந்து வருஷம் டைம் இருக்கு...நல்லா ரூம் போட்டு யோசிங்க....

வரட்டுமா.....

வயிற்றெரிச்சலுடன்


9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த அவலம் நம்ம இந்தியாவில் மட்டுங்தாங்க...


இப்படி தரம்தாழ்ந்து அமைச்சர்களை நியமிக்கும்போது அவர்கள் எப்படி நாட்டை வளர்ச்சிப்பதையில் இட்டுச்செல்வார்கள்...

வேதனை...

Mohamed Faaique said...

போட்டோஸ் சூப்பர்.. சூப்பர் செலெக்சன்..

Mohamed Faaique said...

please remove Word varification

செவிலியன் said...

நண்பர் முகம்மது அவர்களே....வார்த்தை சரிபார்த்தலை நீக்கிவிட்டேன்....இனி அந்த தொல்லை இருக்காது என நினைக்கிறேன்.... பின்னூட்டத்திற்கு நன்றி....
அமைச்சருங்க பண்ணுறத பாத்தா...போட்டோல இருக்குறவுங்க கோவிச்சுக்குவாங்க....

செவிலியன் said...

//இப்படி தரம்தாழ்ந்து அமைச்சர்களை நியமிக்கும்போது அவர்கள் எப்படி நாட்டை வளர்ச்சிப்பதையில் இட்டுச்செல்வார்கள்//

இன்னும் நாம தூங்கிக்கிட்டுதானே இருக்கோம்...
என்றாவது ஒருநாள் இந்த நாடே முழுச்சிக்கும்....அப்ப பாக்கலாம்...
கல்வி அறிவை எல்லாருக்கும் குடுத்துட்டா போதும்....வேகமாக வளர்ச்சியடையலாம்...

சந்திரானந்தா சுவாமிகள் said...

nice one raj..... இன்னும் நன்றாக காரி துப்பவும்...

செவிலியன் said...

//இன்னும் நன்றாக காரி துப்பவும்//

நானும் அதுக்குத்தான் ட்ரை பண்ணுறேன்...இங்க கரண்ட் இல்லாம உடம்புல உமிழ்நீரும் வத்திபோய்ருச்சி... என்ன பண்ணுறது...

சி.பி.செந்தில்குமார் said...

கடைசில வயிற்றெரிச்சலுடன்னு முடிச்சிருக்கீங்களே? ஏன்?

செவிலியன் said...

//கடைசில வயிற்றெரிச்சலுடன்னு முடிச்சிருக்கீங்களே? ஏன்?//


முன்னெல்லாம் குழந்தையானாலும், பெரியவங்களானாலும் உடம்புக்கு முடியலன்னா ஒரு MBBS டாக்டர்கிட்ட போயிட்டு வருவோம்...ஆனா இப்ப அப்படியா???? எதுக்கெடுத்தாலும் ஸ்பெஷலிஸ்ட்ன்னு ஓடுற இந்த காலத்துல, எல்லாத்துலேயும் தகுதியானவங்கள தேடுற இந்த நேரத்துல (எ.கா. கேம்பஸ் இன்டர்வியூ) இந்த மாதிரியெல்லாம் அரசாங்கம் இருந்தா வயிறு எறியாம வேற என்னா பண்ணும்....ஒரு ஆதங்கம்தானுங்கோ...

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்