நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Sunday 27 November, 2011

பசியும்... ருசியும்....

உலகத்தின் ஒரு பக்கம் புல்லா ஒரு கட்டு கட்டிட்டு மீந்து போனத அப்படியே குப்பையில போட்டுடுறாங்க....

உலகத்தோட இன்னொரு பக்கம் சாப்பிட ஒண்ணுமே இல்லாத ஜனங்க குப்பையில கிடக்கறாங்க....

என்ன உலகமடா இது....








மேல பாத்தது உலகத்தோட ஒரு பகுதி....

கீழ இருக்குறது உலகத்தோட இன்னொரு பகுதி....


மனிதம் மரித்துப்போனதால் மரணித்துப்போன மனிதர்கள்...


நம்மிடம் உள்ளதை பகிர்ந்தளிப்போம்....மனிதத்தை உயிர்பிப்போம்...
(இ-மெயிலில் வந்ததை பகிர்ந்துள்ளேன்...)

Sunday 6 November, 2011

உயிர் காக்குமா மருந்துகள்...???

சார் ஒரு மாசமா ஒடம்பு சரியில்ல....மருந்து மாத்திர போட்டும் ஒன்னும் கேக்கல....ஏற்கெனவே ரெண்டு டாக்டர பாத்துட்டேன்...என்ன பண்ணுறதுன்னே தெரியல....



இந்த டயலாக்க நிறைய பேர் கேட்டிருப்போம்...இல்லேன்னா சொல்லியிருப்போம்...இதுக்கு காரணம்தான் இப்போ பெரிய அதிர்ச்சியான செய்தியா இருக்கு....கொஞ்ச நாளைக்கு முன்னாடி..எக்ஸ்பைரி ஆன மருந்த தேதி மாதி விற்ற ஒரு பெரிய மருந்து மோசடி கும்பலை நம்ம தமிழ் நாட்டுல கைது பண்ணாங்க....(இது வரைக்கும் அது என்னாச்சின்னு தெரியல...நாமளும் மறந்துட்டோம்...) 

இப்போது சந்தையில் இருக்கும் 5,000  கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் தரமற்றவை என்று நமது மத்திய சுகாதாரத்துறையாலேயே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது...இதைக்குறித்த விரிவான பேச்சு நடத்த அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டத்தை இந்த மாதம் 14  ஆம் தேதி நடத்தவும் அதன்மூலம் மூவர் கொண்ட குழு அமைத்து இதை தடுக்க வேண்டிய முறைகுறித்து ஆராய்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது...

இந்திய மார்கெட்டில் ஆறிலிருந்து ஏழு சதவீத மருந்துகள் தரமற்றவை என்றும் எதற்கும் உதவாதவை என்றும் வெறும் லாபம் மட்டுமே நோக்கமாக வைத்து விற்பனைக்கு சந்தையில் விடப்பட்டவை என்பதும் வெட்ட வெளிச்சமாக நிரூபிக்கப்பட்டுள்ளது...இதில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால்...இருமல் சிரப்புகளும், வைட்டமின் கலவைகளின் மருந்துகளும், ஈரல் நோய் சம்பந்தப்பட்ட நிரூபிக்கப்படாத மருந்துகளும்தான்.... 

இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் தடை செய்யப்பட்ட சுமார் 46 வகையான காம்பினேஷன் மருந்துகள் (அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளின் சேர்க்கை...) இன்னமும் சந்தையில் தாராளமாக கிடைக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை...Drug controller general of India (DCGI)வின் அனுமதியின்றி வெறும் state drug controller அனுமதியை மட்டும் பெற்று வெளிவரும் இந்த காம்பினேஷன் மருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1067... அதுமட்டுமல்லாமல் சுமார் 90000 க்கும் மேற்பட்ட வகைகளால் இந்திய மருந்துகள் விற்பனையாகின்றன...ஏறக்குறைய அனைத்து பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேவையில்லாத மருந்துகளை (Irrational) தயாரிப்பதில் பங்குவகிக்கின்றன....

சமீபத்தில் ஜோத்பூரில் பலியான ஒரு கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு காரணமாக, அவருக்கு ஏற்றப்பட்ட ஐ வி பாட்டலின் தரக்குறைவுதான் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது....

இவைகளின் முக்கிய டார்கெட் மருந்து கடைகளும், லாப நோக்கத்தையே குறிக்கோளாக கொண்ட மருத்துவர்களும்தான்...இவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்துவிட்டு அல்லது வாங்கி கொடுத்துவிட்டு தங்களின் நோக்கத்தை இந்த மருந்து கம்பெனிகள் நிறைவேற்றிக்கொள்கின்றன. இதில் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்படுவது, இன்னும் பாதிக்கப்படப்போவது வேறு யாரும் அல்ல... பொதுமக்களாகிய நாம்தான்.... 

முக்கிய குறிப்பு....பத்திற்கு மேற்பட்ட இந்திய மருந்து கம்பெனிகளின் பெயர்களை நமது பக்கத்து நாடான இலங்கை தன் நாட்டிற்குள்ளான விற்பனைக்கு தடைசெய்துள்ளது...வெட்கக்கேடு....

Thursday 3 November, 2011

சென்ற பதிவின் தொடர்ச்சி...


சென்ற பதிவின் தொடர்ச்சி...

சென்ற பதிவு http://mokkaiswami.blogspot.com/2011/11/blog-post.html


இவர்தான் அருட்திரு வில்லியம் கௌடி...கிருத்துவ மிஷனரியாக திருவள்ளூர் மற்றும் ஈக்காடு பகுதியில் ஊழியம் செய்து, தன்னுடைய திருப்பணியால் இந்தப்பகுதி வளர்ச்சியடைய செய்தவர்...

இவர் மட்டுமல்ல...இவரைப்போல் எத்தனையோபேர் தமிழகத்தின் பல பகுதிகளில் சமூகத்தால் உதாசீனம் செய்யப்பட்ட மக்களிடம் மனித நேயத்தோடு பழகி, அவர்களுக்கு கல்வி, மருத்துவம், நிலம் மற்றும் தொழில் போன்ற வசதிகளை முன்னின்று செய்து கொடுத்தார்கள்...

கிருத்துவ மிஷனரிகளாக இருந்தாலும்... இவர்கள் வந்த உடனே ஒவ்வொரு ஊரிலும் ஒரு சர்ச் கட்டிவிட்டு நேரடியாக இறை பணியை செய்யவில்லை.....மாறாக இவர்கள் செய்தது....பட்டிக்காட்டானுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவம் மற்றும் கல்வியை அளிக்கும் வழியாக...கல்விச்சாலைகளையும், மருத்துவமனைகளையும் அமைத்தார்கள்...அதன்மூலமாக தங்கள் இறை பணியையும் நிறைவேற்றினார்கள்...

ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது...இன்று வருமானம் ஒன்றே குறிக்கோளாக ஆகிவிட்டது...

கிருத்துவம்...



கல்வி மற்றும் சர்ச்-ஐ பொருத்தவரை சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் மூலதனத்தையோ அல்லது முதலீட்டையோ வைக்கப்போவதில்லை....அதாவது யாருக்கும் சம்பளத்தையோ அல்லது தேவையான பொருட்களையோ மாதாமாதம் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை...சர்ச் ஐப்பொருத்தவரை, உறுப்பினர்கள் கொடுக்கின்ற சந்தா மற்றும் கடவுளுக்காக படைக்கப்படுகின்ற பணமோ அல்லது பொருட்களோ பேராயத்திற்கு வருமானம் மட்டுமே...செலவு என்று சொல்லப்போனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை...

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு பாடுபடுகிறோம் என்று சொல்பவர்கள்...ஒருநாளாவது ஏழை பாழைகளின் வீட்டிற்கு சென்றிருப்பார்களா??? இவர்களை நேரில் சந்திக்கப்போனாலும் இதே கதிதான்...கோட் போட்டவனும், காரில் வருபவனும்தான் இவர்களை சந்தித்து பேச முடியும்...மற்றவர்களை பேருக்கு சந்தித்தாலும் பேசுவது கடினம்...தீண்டாமையையும் ஒடுக்கப்படுதலையும் பொறுக்க முடியாத மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் அளித்த மதத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டார்கள்...ஆனால் இப்போது அதன் நிலைமை அதைவிட கொடுமை...கிருத்துவ மதத்திற்குள்ளேயே ஜாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது...

எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இன்னொரு விஷயம் என்னவென்றால், தேவாலயத்தில் நடைபெறும் தேர்தல்...அரசியல்வாதிகள் இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்...வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய ஆலயத்தில் பல பிரிவுகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவார்கள்... சில இடங்களில் கிருத்துவ மார்கத்திற்கு எதிரான வன்முறை மற்றும் அராஜகத்தை இந்த தேர்தல் நேரங்களில் பார்க்கலாம்...இன்னும் பிஷப் எலக்க்ஷன் வந்தால் அவ்வளவுதான்...ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொள்வார்கள்....ஆன்மீகத்தையும் சாக்கடையாக்கும் நிகழ்ச்சி இந்த தேர்தல் என்றால் மிகையாகாது...

அருட்பணி என்பது எதோ இறைவனைப்பற்றி எடுத்துக்கூறுவது மட்டுமல்ல...சமூகத்தில் நலிந்தவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதே அருட்பணித்தான்....இதைத்தான் இயேசு கிறிஸ்து சொன்னார்...சிறுமைப்பட்டவர்களுக்கு செய்யும் நற்செயல் கடவுளுக்கு செய்வதற்கு சமம்...

இதுபோல் இன்னும் ஆயிரமாயிரம் சர்ச்-களை கட்டினாலும் அதினால் பயன் ஒன்றும் இல்லை...

திருத்துவம்....

சி எஸ் ஐ பொறுத்தவரை...தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை உள்ள அனைத்து பள்ளிகளும் அரசு உதவி பெரும் பள்ளிகளாகவே இருக்கிறது...இலவசக்கல்வி என்று ஆரம்பித்த பள்ளிகளும்கூட இப்போது டொனேஷன், பீஸ் என்று கல்லா கட்டுகின்றன...எங்கள் ஊரில் இருக்கும் கௌடி மேல்நிலைப்பள்ளியில் கூட இதே கதிதான்...வெறும் 7 மாணவர்களை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்று குறைந்தபட்சம் ரூபாய் 10,000  இருந்தால்தான் அட்மிஷனே...ஒரு ஐந்து ஆறு வருடத்திற்கு முன்பு பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வந்த ஒரு மாணவி இதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர ரூபாய் 5000 டொனேஷன் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்தவர்கள்தான் இந்த நிர்வாகத்தினர்...

இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்க சம்பளம்தான்...வித்தியாசம் ஒன்றும் கிடையாது...அதே விடுமுறைநாட்கள்..அதே வேலை...அதே ஊதியம்...ஆனால் சம்பளம் மட்டும் அரசாங்கத்திலிருந்து....

அரசாங்க உதவிபெறும் பள்ளியாக இருந்துகொண்டு, இவ்வாறு டொனேஷன் வாங்குவதற்கு பதிலாக வெளியில் வந்து தெருத்தெருவாக பிச்சை எடுக்கலாம் நிர்வாகத்தினர்....

இவர்களும் யாருக்கும் சம்பளத்தையோ அல்லது தேவையான பொருட்களையோ மாதாமாதம் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை...அதனால் வரும் பணம் அத்தனையும் மிச்சம்...கல்வியின் தரம் உயர்ந்ததா என்றால்...நம் முன் ஒரு பெரிய கேள்விக்குறிதான் நிற்கிறது...என்ன ஒன்று...தலைமை ஆசிரியரின் அறை மட்டும் உயர்ந்திருக்கின்றது...ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட ரூமாக...

இன்னும் ஆயிரமாயிரம் பள்ளிகளைக்கட்டுங்கள்... பயன் ஒன்றும் இல்லை...

மருத்துவம்...



எத்தனையோ பேரின் உயிர் காத்து, அநேக குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்த மருத்துவத்துறையின் நிலைமைதான் கவலைக்கிடமாக இருக்கிறது...

இலவச மருத்துவ சேவை அல்லது குறைந்த செலவில் மருத்துவ சேவையை அளித்து வந்த மருத்துவமனைகள்...இன்று தங்களுடைய வருமானத்தை வைத்துக்கொண்டு தங்களை பராமரித்துக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன....இதின் ஊழியர்களுக்கோ அல்லது மருத்துவமனையை சீர்செய்யவோ பேராயத்திலிருந்து எந்த உதவியும் அருளப்படுவதில்லை... இந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் எடுக்கும் முடிவினைப்போருத்து இதன் நிலைமை நிர்ணயிக்கப்படுகிறது...இதில் வேலை செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு கூட சிகிச்சை இலவசம் கிடையாது என்பதுதான் வேதனைக்குரிய உண்மை...இவர்களின் ஊதியமோ மற்ற தனியார் மருத்துவமனைகளை விட மிக மிகக்குறைவுதான்...

ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க முதலீடு அதிகம் வைக்கவேண்டும்...அதின் ஊழியர்களின் சம்பளம்...மருந்து மாத்திரைகள்...தேவையான உபகரணங்கள்....அனைத்தும் தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும்...இந்த சூழ்நிலையில் குறைந்த செலவில் மருத்துவ சேவை என்பதும் படிப்படியாக குறைந்துவருகிறது....எங்கள் பகுதியில் அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த மருத்துவமனைகள்....மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளதற்கு சென்னை பேராயத்தின் கவனக்குறைவே அல்லாமல் வேறில்லை.... பொதுவாக மருத்துவமனைகள் பேராயத்தின் கையில் இருக்கும் வரை கண்டிப்பாக வளராது....

வேலூரில் உள்ள சி எம் சி மருத்துவமனை இன்று வரை பேராயத்தின் கட்டுப்பாட்டில் இல்லை....அதனால் நன்றாக வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் உலகமே வியந்து பாராட்டும் வகையில் இருக்கிறது....சி எம் சி யில் இருந்து படித்துவிட்டோ அல்லது வேலை செய்துவிட்டோ எங்கு சென்றாலும் பெரிய வரவேற்பு இருக்கிறது... 



அதே வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை யில் உள்ள ஸ்கடர் மெமோரியல் ஆஸ்பத்திரியை எடுத்துக்கொண்டால் அதன் வளர்ச்சி என்பது ஒன்றும் இல்லாமல் இருக்கிறது....இந்த மருத்துவமனையும் மிகவும் பழமையான புகழ்பெற்ற ஒன்று...இன்று இந்த மருத்துவமனையும் இந்த நிலைமைக்கு வரக்காரணம்....இது அந்த மாவட்ட பேராயத்தின் கைகளில் இருப்பதால்தான்....

சென்னையில் உள்ள சி எஸ் ஐ கல்யாணி மருத்துவமனையை எடுத்துக்கொண்டால்...அதின் சிற்றாலயத்தையும், உள் நோயாளிகளின் வார்டையும் பார்த்தாலே உண்மை எளிதாக விளங்கிவிடும்....


இவ்வளவையும் வைத்து பார்க்கும்போது ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது...செலவு செய்யாமல் வருமானம் வருகின்ற வழிகளை மட்டும் ஆராய்ந்து அதில் மட்டும் தன்னுடைய நிறைவான பணியினை செய்கிறது இந்த சி எஸ் ஐ ன் பேராயங்கள்....அதிலும் வருகின்ற தலைமை மருத்துவ அதிகாரிகள் நல்ல மனமுடயவர்களாய் இருந்தால் தப்பிப்போம்...அல்லது அவர்கள் தங்களின் முன்னேற்றத்தை மட்டும் பார்த்துக்கொண்டு...கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக்கொண்டு போய்விடுவார்கள்...

இன்றும் இந்த ஈக்காடு மருத்துவ மனையில் ஒரு நல்ல ஈ சி ஜி மெஷின் வாங்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்று இங்கு இருப்பவர்களுக்குத்தான் தெரியும்...


இதுபோன்ற ஆலயத்தைக்கட்ட பல லட்சம் செலவு செய்யும் பெரிய நகரத்து சர்ச்ல் உள்ளவர்கள் மனது வைத்தால்....ஒரு ஈ சி ஜி மெஷின் என்பது பெரிய விஷயமல்ல.....

உயிர் காத்த மருத்துவமனைகளின் உயிரை காப்பார்களா?????? பேராயம்தான் பதில் சொல்லவேண்டும்......ஏனென்றால் இன்றைய நிலைமையில் இயேசு கிறிஸ்து கிருத்துவர்களாலேயே சிலுவையில் அறையப்படுகிறார்...


உயிர்த்தெழுமா??? நீதியும் நியாயமும்....


Tuesday 1 November, 2011

கிருத்துவமும், மருத்துவமும், திருத்துவமும்....

அதாவதுங்க...இது யாரையும் குறை சொல்லுறதுக்காகவோ...அல்லது தப்பு கண்டுபிடிக்கிறதுக்காகவோ இல்லீங்க.... யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு சொன்னதெல்லாம் போயி... இன்னிக்கி யாம் பெரும் இன்பம் எனக்கு மட்டும்ன்னு ஆயிருச்சி...

மொதல்ல ஒரு சின்ன வரலாற்று குறிப்புகளை மட்டும் பாக்கலாம்..

இது ஒரு சாம்பிள்தான்...எங்க பகுதியில இருக்கிறத மட்டும் சொல்லப்போறேன்...உங்க பகுதியில இருக்கிறத நீங்களே போய் தெரிஞ்சிக்கோங்க....

சி எஸ் ஐ கௌடி மேல்நிலைப்பள்ளி


                                        பளபளக்கும் புதிய பள்ளிக்கூட கட்டிடம்...

இந்த பள்ளி, சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட அதே 1857 ஆம் ஆண்டு ப்ரீ சர்ச் ஆப் ஸ்காட்லான்ட் மிஷனால் திருவள்ளூரில் தொடங்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டுவந்த இந்த பள்ளிக்கூடம்  இப்போது மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு தன் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது...பல கிருத்துவ ஸ்தாபனத்தால் பராமரிக்கப்பட்ட இந்த பள்ளி இப்போது சி எஸ் ஐ சென்னை பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது...இப்போதைய பேராயரான திரு.V.தேவசகாயம் அவர்கள் இந்த பள்ளியில் படித்தவர்தான்...இதே போன்ற ஒரு பள்ளி திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டிலும் அதே கால கட்டத்தில் நிறுவப்பட்டு இன்றும் நடத்தப்பட்டு வருகின்றது...

சி எஸ் ஐ கௌடி நினைவாலயம்...


                                புதுப்பொலிவுடன் கௌடி நினைவாலயம்....

இந்த ஆலயம் 1925 ஆம் ஆண்டு ஆயர்.திரு. வில்லியம் கௌடி அவர்களின் நினைவாக கட்டப்பட்டது...
இதே போல ஈக்காட்டை சேர்ந்த சி எஸ் ஐ ஆலயமும் மிகவும் பழமை வாய்ந்தது..


                                              தூய வெஸ்லி ஆலயம் ஈக்காடு...

இப்போது இந்த இரண்டு ஆலயங்களும் சி எஸ் ஐ சென்னை பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது....

சி எஸ் ஐ மருத்துவமனை...ஈக்காடு


                        பொலிவிழந்து காணப்படும் ஈக்காடு மருத்துவமனை....

நூற்றாண்டு விழாவினைக்கடந்து நூற்று இருபத்தைந்து ஆண்டுகளைத்தாண்டி நடந்து வருகிறது...இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் உலக அளவில் தங்களுடைய பணியினை செய்து வருகிறார்கள்...மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த இந்த மருத்துவமனை இப்போது மிகவும் நலிந்து நோயுற்று தன்னை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் இருக்கின்றது...

இந்த மருத்துவமனையின் இன்னொரு கிளை திருவள்ளூரில் இருக்கிறது. 2006  ஆம் ஆண்டு கட்டப்பட்ட அதுவாவது நன்றாக இருக்கிறதா என்றால்... நீங்களே பாருங்கள்...


      நான்கு வருடங்கள் கூட நிலைக்காத டைல்ஸ் பெயர்ந்த நிலையில்...

 எத்தனையோ பேர் வந்து தன் நோயை குணமாக்கிக்கொண்டு சென்ற இந்த மருத்துவமனை இன்று நேற்றல்ல...ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நிலையில்தான் இருக்கிறது....இந்த மருத்துவமனைகளும் அதே சி எஸ் ஐ சென்னைப்பேராயத்தின் ஓர் அங்கம்தான்...

இதைவிட ஒரு செய்தி இருக்கிறது....இதை என்னவென்று சொல்லுவது...

எங்கள் ஊரின் பக்கத்தில் இருக்கும் ஆந்திர மாநிலத்தின் பார்டரில் இருக்கும் நகரியில் ஒரு சி எஸ் ஐ மருத்துவமனை உள்ளது....ஓராசிரியர் பள்ளிபோல அந்த மருத்துவமனைக்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும்தான்...இப்போதெல்லாம் ஒரு கிளினிக்கிலேயே இரண்டுக்கு மேற்பட்ட டாக்டர்கள் இருக்கிறார்கள்...இதுவும் அதே சி எஸ் ஐ சென்னைப்பேராயத்தின் ஓர் அங்கம்தான்... 

தற்போதைய பேராயர் அவர்களின் சொந்த ஊரான பன்னூரில் ஒரு தேவாலயத்தை கட்டியிருக்கிறார்கள்... அந்த ஆலயத்தைக்கட்ட சென்னை அடையாரில் உள்ள ஒரு சர்ச் தனது முழு பங்களிப்பை கொடுத்துள்ளது...அதாவது ஒரு ஆறு பாயில் உட்காரக்கூடிய ஜனத்தொகை உள்ள அந்த குக்கிராமத்தில்...ஆயிரம் பேர் உட்காரக்கூடிய அளவில் ஒரு சர்ச் கட்டியுள்ளனர்...இதுவும் அதே சி எஸ் ஐ சென்னைப்பேராயத்தின் ஓர் அங்கம்தான்... இதையும் பாருங்கள்....
 

இதே சென்னை பேராயத்தை சேர்ந்த ஒரு குருசேகரம் கடந்த 17 வருஷமா ஒரு தேவாலயம் இல்லாம இருக்கு... திருத்தணிக்கும் சோளிங்கருக்கும் நடுவுல இருக்குற ஆர்.கே.பேட்டை குருசேகரம்தான் அது....ஒருவேளை இந்த ஊர்ல இருந்து ஒரு பிஷப் வந்தாத்தான் சர்ச் கட்டுவாங்க போலிருக்கு....

இப்போ நான் என்னா சொல்ல வர்றேன்னா....

ஒவ்வொரு படத்தையும் கிளிக் பண்ணி பெருசா பாருங்க....உங்களால முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு தெரிஞ்ச கிருத்துவ நண்பர்களுக்கு இதை சொல்லுங்க...ஷேர் பண்ணுங்க...உங்க கமெண்ட்ட பதிவு பண்ணுங்க.... 

இதனோட முக்கியமான விஷயத்த அடுத்த பதிவுல சொல்லுறேன்....

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்