இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சார் ஒரு மாசமா ஒடம்பு சரியில்ல....மருந்து மாத்திர போட்டும் ஒன்னும் கேக்கல....ஏற்கெனவே ரெண்டு டாக்டர பாத்துட்டேன்...என்ன பண்ணுறதுன்னே தெரியல....
இந்த டயலாக்க நிறைய பேர் கேட்டிருப்போம்...இல்லேன்னா சொல்லியிருப்போம்...இதுக்கு காரணம்தான் இப்போ பெரிய அதிர்ச்சியான செய்தியா இருக்கு....கொஞ்ச நாளைக்கு முன்னாடி..எக்ஸ்பைரி ஆன மருந்த தேதி மாதி விற்ற ஒரு பெரிய மருந்து மோசடி கும்பலை நம்ம தமிழ் நாட்டுல கைது பண்ணாங்க....(இது வரைக்கும் அது என்னாச்சின்னு தெரியல...நாமளும் மறந்துட்டோம்...)
இப்போது சந்தையில் இருக்கும் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் தரமற்றவை என்று நமது மத்திய சுகாதாரத்துறையாலேயே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது...இதைக்குறித்த விரிவான பேச்சு நடத்த அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டத்தை இந்த மாதம் 14 ஆம் தேதி நடத்தவும் அதன்மூலம் மூவர் கொண்ட குழு அமைத்து இதை தடுக்க வேண்டிய முறைகுறித்து ஆராய்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது...
இந்திய மார்கெட்டில் ஆறிலிருந்து ஏழு சதவீத மருந்துகள் தரமற்றவை என்றும் எதற்கும் உதவாதவை என்றும் வெறும் லாபம் மட்டுமே நோக்கமாக வைத்து விற்பனைக்கு சந்தையில் விடப்பட்டவை என்பதும் வெட்ட வெளிச்சமாக நிரூபிக்கப்பட்டுள்ளது...இதில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால்...இருமல் சிரப்புகளும், வைட்டமின் கலவைகளின் மருந்துகளும், ஈரல் நோய் சம்பந்தப்பட்ட நிரூபிக்கப்படாத மருந்துகளும்தான்....
இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் தடை செய்யப்பட்ட சுமார் 46 வகையான காம்பினேஷன் மருந்துகள் (அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளின் சேர்க்கை...) இன்னமும் சந்தையில் தாராளமாக கிடைக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை...Drug controller general of India (DCGI)வின் அனுமதியின்றி வெறும் state drug controller அனுமதியை மட்டும் பெற்று வெளிவரும் இந்த காம்பினேஷன் மருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1067... அதுமட்டுமல்லாமல் சுமார் 90000 க்கும் மேற்பட்ட வகைகளால் இந்திய மருந்துகள் விற்பனையாகின்றன...ஏறக்குறைய அனைத்து பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேவையில்லாத மருந்துகளை (Irrational) தயாரிப்பதில் பங்குவகிக்கின்றன....
சமீபத்தில் ஜோத்பூரில் பலியான ஒரு கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு காரணமாக, அவருக்கு ஏற்றப்பட்ட ஐ வி பாட்டலின் தரக்குறைவுதான் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
இவைகளின் முக்கிய டார்கெட் மருந்து கடைகளும், லாப நோக்கத்தையே குறிக்கோளாக கொண்ட மருத்துவர்களும்தான்...இவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்துவிட்டு அல்லது வாங்கி கொடுத்துவிட்டு தங்களின் நோக்கத்தை இந்த மருந்து கம்பெனிகள் நிறைவேற்றிக்கொள்கின்றன. இதில் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்படுவது, இன்னும் பாதிக்கப்படப்போவது வேறு யாரும் அல்ல... பொதுமக்களாகிய நாம்தான்....
முக்கிய குறிப்பு....பத்திற்கு மேற்பட்ட இந்திய மருந்து கம்பெனிகளின் பெயர்களை நமது பக்கத்து நாடான இலங்கை தன் நாட்டிற்குள்ளான விற்பனைக்கு தடைசெய்துள்ளது...வெட்கக்கேடு....
8 comments:
anna athunaal enna thaan sick aanalum india marnthai oorukku vantha sapidrathe illai.. varumpothu ingirunthe oru FIST AID medicines kondu varen..our drugs control is not gu.. fulla lancham lancham lancham..
.கொஞ்ச நாளைக்கு முன்னாடி..எக்ஸ்பைரி ஆன மருந்த தேதி மாதி விற்ற ஒரு பெரிய மருந்து மோசடி கும்பலை நம்ம தமிழ் நாட்டுல கைது பண்ணாங்க....(இது வரைக்கும் அது என்னாச்சின்னு தெரியல...நாமளும் மறந்துட்டோம்...) //
மறதி நாம வாங்கி வந்த வியாதி இல்லை இல்லை வரம்!
நோய் வந்து செத்தாலும் பரவால்ல தரமற்ற மருந்த கூடாதுன்னு முடிவெடுக்கணும் போலிருக்கு .
தரமற்ற மருந்துகளை கண்டு பிடிக்க முறையான அதிகாரிகளும் இல்ல... புதுச்சேரியில் மட்டும் இருபத்தைந்து மருந்து ஆய்வாளர்களின் பணியிடம் காலியாய் இருப்பதாக 2005 இல் தகவல் வந்தது... இது போல் எத்தனையோ காலியிடங்கள் உள்ளன.. பிடிபடும் மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய இரண்டே சோதனை கூடம் உள்ளது.. இந்தியா முழுவதும் இருந்து வரும் அனைத்து மருந்துகளையும் சோதனை செய்து ரிப்போர்ட் வருவதற்குள் இரண்டு ஆண்டாகி விடும்... மருந்து துறை எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்று பெரும்பாலான மருத்துவர்களை கேட்டுப் பாருங்கள்.. பதில் சுகாதார துறை என்று வரும், உண்மையில் மருந்து ரசாயன மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் வருகிறது... நம்ம அழகிரி அண்ணன் தான் இப்ப இதுக்கு அமைச்சர்
my friend says, for a posting of drug inspector 75 lacks required as bribe.
.பத்திற்கு மேற்பட்ட இந்திய மருந்து கம்பெனிகளின் பெயர்களை நமது பக்கத்து நாடான இலங்கை தன் நாட்டிற்குள்ளான விற்பனைக்கு தடைசெய்துள்ளது...வெட்கக்கேடு....// அப்படியா, தெரியாத தகவல் இது..
உடனே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், உயிர்களில் விளையாடாதீர்கள்.
இதற்கு முடிவே இல்லையா?
இதற்கு முடிவே இல்லையா?
Post a Comment